பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.148 கோடி மானியம் ஒதுக்கீடு

Added : நவ 16, 2021
Share
Advertisement
மதுரை : தமிழகத்தில் ரேஷன் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.148 கோடி நிலுவை மானியத்தை அரசு வழங்கியது.இச்சங்கங்கள் சார்பில் மாநில அளவில் 32 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். கடை வாடகை, லாரி வாடகை, ஊழியர்களுக்கான பணிக்கால பயன்கள் உள்ளிட்ட செலவினங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு மானியம் வழங்கப்படும்.இதன்படி 2018 -

மதுரை : தமிழகத்தில் ரேஷன் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.148 கோடி நிலுவை மானியத்தை அரசு வழங்கியது.

இச்சங்கங்கள் சார்பில் மாநில அளவில் 32 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். கடை வாடகை, லாரி வாடகை, ஊழியர்களுக்கான பணிக்கால பயன்கள் உள்ளிட்ட செலவினங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு மானியம் வழங்கப்படும்.இதன்படி 2018 - 2019க்கு ரூ. 398 கோடி வழங்க வேண்டியதில் 2020, நவ.,ல் ரூ.250 கோடி வழங்கப்பட்டது.

மீதமுள்ள நிலுவை ரூ.148 கோடியை சங்கங்களுக்கு அரசு தற்போது வழங்கியுள்ளது.இதில் சென்னைக்கு ரூ.10 கோடி, கோவைக்கு ரூ.8 கோடி, மதுரைக்கு ரூ.6 கோடி என 33 மாவட்டங்களுக்கான நிலுவை தொகையை குறிப்பிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வெங்கடாசலபதி கூறுகையில், “சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம்.

தற்போது கிடைத்துள்ளது. அரசுக்கு நன்றி. இதன் மூலம் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கால பயன்கள் தடையின்றி வழங்க முடியும்” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X