அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு கட்டடங்களால் அவதி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு கட்டடங்களால் அவதி

Added : நவ 16, 2021
Share
சாத்துார் : -விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி முக்கிய ரோடுகள் ,தெருக்களில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு கட்டடங்களால் ரோடு குறுகலாக நெருக்கடியால் பலரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.இதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்துார், ஸ்ரீவி., திருத்தங்கள், சிவகாசி என நகர் பகுதி ரோடு,தெருக்களில்


சாத்துார் : -விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி முக்கிய ரோடுகள் ,தெருக்களில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு கட்டடங்களால் ரோடு குறுகலாக நெருக்கடியால் பலரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

இதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்துார், ஸ்ரீவி., திருத்தங்கள், சிவகாசி என நகர் பகுதி ரோடு,தெருக்களில் புதியதாக கட்டப்படும் கட்டடங்கள் பாதையை ஆக்கிரமித்து கட்டப்படுகின்றன. சாக்கடை மேல் வாசல்படி , கழிப்பறைகளையும் பலர் கட்டி உள்ளனர்.

லாரிகள் சென்று திரும்பிய தெருக்களில் தற்போது சிறிய லோடு ஆட்டோக்கள் கூட சென்று திரும்ப வழியில்லை. இதன் நெருக்கடி குறித்து அதிகாரிகள் நன்கு அறிந்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வேடிக்கை பார்ப்பதால்

இந் நிலை தொடர்கிறது.நகராட்சி பகுதிகளில் வீடு, கடை கட்டுபவர்கள் பொது பயன்பாட்டிற்காக இடத்தை பொறுத்து தங்கள் நிலத்தில் 2 அடி முதல் 3 அடி வரை இடம் விட்டு கட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இந்த விதியை பின்பற்றாமல் பலரும் தங்கள் இடம் போக பொது நடைபாதையான தெருவையும் ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டி வருகின்றனர். பலர் உள்ளாட்சியில் கட்டுமான பணிக்கான அனுமதி பெறாமல் கட்டடங்களை கட்டி உள்ளனர்.

இதனால் நகர்பகுதி தெருக்களின் மழைநீர் செல்லவும் ,வாகனங்கள் விலகி செல்லவும் வழியின்றி போக்குவரத்து நெருக்கடியும், மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாக தொற்று நோய் அபாயமும் ஏற்படுகிறது. இது போன்ற ஆக்கிரமிப்பு கட்டடங்களை கண்டறிந்த அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்திரவிட வேண்டும்

.நடமாட கூட முடியல

மாவட்டத்தில் நகர் ரோடு,தெருக்களில் மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான பகுதியில் ரோடு இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பால் சிறிய வாகனம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

வரி வசூலில் கவனம் கொள்ளும் அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. நகர் வரைபடத்தை கொண்டு தெருக்கள் அகலத்தை கண்டறிந்து ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.எம்.வேல்ச்சாமி, சமூக ஆர்வலர், சாத்துா

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X