பொது செய்தி

தமிழ்நாடு

45 நாட்களுக்கு முன் இலக்கை எட்டிய பருவமழை; குமரியில் அதிகம்: மதுரை, விருதுநகரில் குறைவு

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை : வடகிழக்கு பருவமழை, டிசம்பர் வரையிலும் பெய்ய வேண்டிய அளவை, 45 நாட்களுக்கு முன்பே எட்டியுள்ளது.கன்னியாகுமரி, விழுப்புரத்தில் அதிகமாகவும்; விருதுநகர், மதுரையில் குறைவாகவும் பெய்துள்ளது.தமிழகத்தில் அக்டோபர் 25ல் வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து பரவலாக மழை கொட்டி வருகிறது. சென்னை முதல் குமரி வரை பெரும்பாலான கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு


சென்னை : வடகிழக்கு பருவமழை, டிசம்பர் வரையிலும் பெய்ய வேண்டிய அளவை, 45 நாட்களுக்கு முன்பே எட்டியுள்ளது.



latest tamil news




கன்னியாகுமரி, விழுப்புரத்தில் அதிகமாகவும்; விருதுநகர், மதுரையில் குறைவாகவும் பெய்துள்ளது.தமிழகத்தில் அக்டோபர் 25ல் வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து பரவலாக மழை கொட்டி வருகிறது. சென்னை முதல் குமரி வரை பெரும்பாலான கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இயல்பை தாண்டியது

வடகிழக்கு பருவமழை நிலவரத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று வரை 44 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்த 15 நாட்களில் இயல்பாக, 28 செ.மீ., பெய்திருக்க வேண்டும்; ஆனால், டிசம்பர் வரை பெய்ய வேண்டிய 44 செ.மீ., அளவை முன் கூட்டியே எட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் சென்னையில் வழக்கமாக, 48 செ.மீ., பெய்திருக்க வேண்டும்;


latest tamil news




ஆனால் 69 சதவீதம் அதிகமாக 81 செ.மீ., மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றேகால் மடங்கு அதிகமாக 70 செ.மீ., மழை பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 10 சதவீதம்; மதுரை மாவட்டத்தில் 14 சதவீதம் இயல்பை விட மழை குறைவாக பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், 11ம் தேதி முதல் நேற்று முன் தினம் வரை, நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்துள்ளது.

இங்கு நவம்பர் 11 முதல் 14 வரை இயல்பாக 3 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 9 மடங்கு அதிகமாக 28 செ.மீ., பெய்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர் மாத மழையில் அதிகபட்சமாக 1992 நவ., 14ல் ஒரே நாளில் 21 செ.மீ., பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அதிகபட்ச அளவை தாண்டி இந்த ஆண்டு நவ., 13ல் ஒரே நாளில் 22 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.இந்த பருவமழை காலத்தில் நேற்று வரை கன்னியாகுமரியில் வழக்கமாக 39 செ.மீ., பெய்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றரை மடங்கு அதிகமாக 84 செ.மீ., பெய்துள்ளது. இதனால், மாவட்டம் முழுதும் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X