சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தளவானுார் அணைக்கட்டு வெடி வைத்து தகர்ப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் அடுத்த தளவானுாரில் சேதமடைந்த அணைக்கட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், தளவானுார் மற்றும் கடலுார் மாவட்டம், எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 2020ல் அ.தி.மு.க., ஆட்சியில் 25.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டது.நாமக்கல் பி.எஸ்.டி., கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் இப்பணியை மேற்கொண்டது. இந்த அணையில் 2

விழுப்புரம்-விழுப்புரம் அடுத்த தளவானுாரில் சேதமடைந்த அணைக்கட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், தளவானுார் மற்றும் கடலுார் மாவட்டம், எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 2020ல் அ.தி.மு.க., ஆட்சியில் 25.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டது.நாமக்கல் பி.எஸ்.டி., கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் இப்பணியை மேற்கொண்டது. இந்த அணையில் 2 மாவட்டங்களுக்கும் தலா 3 ஷெட்டர்கள் அமைக்கப்பட்டது.கடந்த 9ம் தேதி அணையில் உள்ள மணல் தடுப்புச் சுவர் ஆற்று நீரில் கரைந்து, அடித்துச் சென்றது. இதனால், விழுப்புரம் மார்க்கமுள்ள வலதுபுறம் அணையின் முதல் ஷெட்டர் பகுதி முற்றிலுமாக சேதமானது.பின், விழுப்புரம் பொதுப்பணி துறை (நீர்வளம்) பிரிவு அதிகாரிகள், 10ம் தேதி, மணல் தடுப்பு கரைந்த பகுதிக்கு அருகே கருங்கற்கள் மற்றும் மணல் மூட்டைகளைக் கொண்டு சீரமைத்தனர்.இதை தொடர்ந்து, 11ம் தேதி கரைப்பகுதி மேலும் 50 மீட்டர் சரிந்து, அருகில் உள்ள கரும்பு பயிர்களில் புகுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது.மேலும் கரையை உடைத்துக் கொண்டு தண்ணீர் ஊருக்குள் புகாமல் இருக்கவும், தண்ணீர் நேராக செல்லவும் சேதமான அணையின் ஷெட்டர்களை வெடி வைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக பொதுப்பணித் துறை (நீர்வளம்) அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் அனுமதிபெற்று, நேற்று முன்தினம் கண்காணிப்பு பொறியாளர் முத்தையா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மாலை 5:50 மணிக்கு பயங்கர சத்தத்தோடு வெடித்தும், அணைக்கட்டு சிறிய விரிசல்களோடு சாயாமல் நின்றது.தொடர்ந்து, கலெக்டர் மோகன் ஆலோசனையின் பேரில், நேற்று காலை 8:00 மணி முதல் பொதுப்பணி துறை (நீர்வளம்) அதிகாரிகள், வெடி வைத்து தகர்ப்பதில் உள்ள தொழில்நுட்ப முறையை மாற்றி, மருந்துகளை வைக்கும் முயற்சியில் இறங்கினர்.இதையொட்டி, சென்னை தொழிலாளர்கள் 20 பேர், வெடி மருந்துகளை அணைக்கட்டு பகுதியில் துளையிட்டு வைப்பதற்காக அழைத்து வரப்பட்டனர். இவர்கள், அணைக்கட்டில் 47 இடங்களில் துளையிட்டு, அதில், 47 ஜெலட்டின் குச்சிகள், 300 டெட்டனேட்டர்கள் வைத்தனர்.இந்த பணிகள் அனைத்தும் மாலை 3:00 மணிக்கு முடிவடைந்த நிலையில், அணைக்கட்டு பகுதிக்கு அருகே அரசு பள்ளி இருந்ததால் வெடிக்கும் பணி சற்று தாமதமாகியது. 3:20 மணிக்கு பள்ளி முடிந்தவுடன், 3:30 மணிக்கு அணைக்கட்டில் பயங்கர சத்தத்தோடு வெடித்தது.இதில், அணைகட்டு மதகுகள் உள்ள மேற்புறம் முற்றிலுமாக கீழே விழுந்தது. கீழ்புறத்தில் உள்ள ஷெட்டர் பகுதி மற்றும் தடுப்புச் சுவர்கள் மட்டும் விழாமல் இருந்தது. நேற்று நடந்த முயற்சியில், அணைக்கட்டு 70 சதவீதம் தகர்க்கப்பட்டது.மீதமுள்ள 30 சதவீதம் பகுதிகள், இன்று (16ம் தேதி) கிரேன் மூலம் தண்ணீரில் கீழே தள்ளி தகர்க்கப்படும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது, சேதமடைந்த அணைக்கட்டு உடைந்த பகுதியின் வழியாக ஆற்று நீர் செல்லத் துவங்கியுள்ளது. இதனால், கரை பகுதியின் வழியாக செல்வது ஓரளவு குறைந்துள்ளது. முழுதுமாக அகற்றியவுடன் ஆற்றுநீர் நேராக கடலுக்குள் செல்லும். பின், உடைந்த கரைப்பகுதி, கருங்கற்கள் மற்றும் மணலைக் கொண்டும் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.விவசாயிகள் மறியல்தளவானுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர், நேற்று மாலை 4:00 மணிக்கு மேல், மீண்டும் தகர்த்த இடத்தில் புதிய அணைக்கட்டை துரிதமாக கட்டி தரக்கோரி திடீர் மறியலில் ஈடுபட்டனர்.அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்து 4:15 மணிக்கு கலைந்து போகச் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X