பள்ளி, கல்லூரி மாணவர் பேச்சு போட்டி ; சிவகாசி அரசு கல்லூரி மாணவி ரம்யாக்கு முதல் பரிசு

Added : நவ 16, 2021
Advertisement
விருதுநகர் : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை யொட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் விருதுநகர் ஹாஜி பி சையது முகமது மேல்நிலைப்பள்ளியில் நடந்ததில் 38 பள்ளி மாணவர்களும், 19 கல்லுாரி மாணவர்களும் பங்கேற்றனர்.இதில்கல்லுாரியளவில் சிவகாசி அரசு கல்லுாரி மாணவி ரம்யா, பள்ளியளவில் தளவாய்புரம் பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக் பள்ளி


விருதுநகர் : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை யொட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் விருதுநகர் ஹாஜி பி சையது முகமது மேல்நிலைப்பள்ளியில் நடந்ததில் 38 பள்ளி மாணவர்களும், 19 கல்லுாரி மாணவர்களும் பங்கேற்றனர்.

இதில்கல்லுாரியளவில் சிவகாசி அரசு கல்லுாரி மாணவி ரம்யா, பள்ளியளவில் தளவாய்புரம் பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக் பள்ளி மாணவி திவ்யா முதல் பரிசை பெற்றனர்.இப்போட்டியை சி.இ.ஓ., ஞான கவுரி துவங்கி வைத்தார். கல்லுாரி தமிழ் துறைத்தலைவர்கள் கிளிராஜ், ஸ்ரீதர், நாகஜோதி, ஆசிரியர்கள் ராமர், ராஜசேகர், வேல்முருகன் நடுவர்களாக இருந்தனர்.

மாவட்ட சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜா ஒருங்கிணைத்தார். கல்லுாரிக்கான போட்டிகளில் முதல் பரிசை சிவகாசி அரசு கல்லுாரி மாணவி ரம்யா, 2ம் பரிசை விருதுநகர் வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி மாணவி சுமதி, 3ம் பரிசை சிவகாசி அரசு கல்லுாரி மாணவன் மணிபிரபு பெற்றனர். பள்ளிகளுக்கான போட்டியில் முதல் பரிசை தளவாய்புரம் பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா, 2ம் பரிசை திருத்தங்கல் குளோரி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி பிரதீபா, 3ம் பரிசை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுபத்ராதேவி பெற்றனர்.

மெட்டுக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தனுஜா, ஆவடையாபுரம் அரசு மேல்நிலைபள்ளி மாணவி சிரின்பானு அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசை பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X