கடலுார்-கடலுார் மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளை முன்னாள் முதல்வர் பழனிசாமி, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர்.கடலுார் மாவட்டத்தில் பெய்யும் வடகிழக்கு பருவ மழையால், விவசாய பயிர்கள், வீடுகள், கால்நடைகள் பாதித்துள்ளன. பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் 13ம் தேதி பார்வையிட்டார்.இந்நிலையில், இன்று (16ம் தேதி) முன்னாள் முதல்வர் பழனிசாமி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர். காலை 9.00 மணிக்கு வரும் அவர்கள், புவனகிரி மற்றும் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பூவாலை உள்ளிட்ட கிராமங்களில் பாதித்த விவசாய பயிர்களை பார்வையிட்டு, பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குகின்றனர். பின், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர்.