கடலுார் மாவட்ட  மழை பாதிப்புகள் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்., இன்று ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்ட  மழை பாதிப்புகள் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்., இன்று ஆய்வு

Added : நவ 16, 2021
Share
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளை முன்னாள் முதல்வர் பழனிசாமி, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர்.கடலுார் மாவட்டத்தில் பெய்யும் வடகிழக்கு பருவ மழையால், விவசாய பயிர்கள், வீடுகள், கால்நடைகள் பாதித்துள்ளன. பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் 13ம் தேதி பார்வையிட்டார்.இந்நிலையில், இன்று (16ம் தேதி) முன்னாள் முதல்வர்

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளை முன்னாள் முதல்வர் பழனிசாமி, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர்.கடலுார் மாவட்டத்தில் பெய்யும் வடகிழக்கு பருவ மழையால், விவசாய பயிர்கள், வீடுகள், கால்நடைகள் பாதித்துள்ளன. பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் 13ம் தேதி பார்வையிட்டார்.இந்நிலையில், இன்று (16ம் தேதி) முன்னாள் முதல்வர் பழனிசாமி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர். காலை 9.00 மணிக்கு வரும் அவர்கள், புவனகிரி மற்றும் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பூவாலை உள்ளிட்ட கிராமங்களில் பாதித்த விவசாய பயிர்களை பார்வையிட்டு, பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குகின்றனர். பின், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X