சூர்யா பேனருக்கு தீவைப்பு 4 பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூர்யா பேனருக்கு தீவைப்பு 4 பேர் மீது வழக்கு

Added : நவ 16, 2021
Share
பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அருகே நடிகர் சூர்யா பேனரை, தீ வைத்து எரித்ததாக, 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததாக, அந்த சமூதாயத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தில், நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்றம் சார்பில் பேனர்

பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அருகே நடிகர் சூர்யா பேனரை, தீ வைத்து எரித்ததாக, 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததாக, அந்த சமூதாயத்தை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தில், நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்றம் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.அந்த பேனரை, கடந்த 14ம் தேதி அப்பகுதியை சேர்ந்த சிலர், தீ வைத்து எரித்தனர்.வி.ஏ.ஓ., ராஜசேகரன், 39; கொடுத்த புகாரின் பேரில், அப்பகுதியை சேர்ந்த செந்துாரபாண்டியன், வேணுகோபால் உட்பட 4 பேர் மீது பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர்சிவராமன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X