குறைந்தளவில் பஸ்கள் இயக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்தளவில் பஸ்கள் இயக்கம்

Added : நவ 16, 2021
Share
கடலுார்-பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் கடலுார் பஸ் நிலையத்தில் போதிய அரசு டவுன் பஸ்கள் இயக்காததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 19 மாதங்களுக்கு பின் நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் காலை பள்ளிக்கு வந்தனர்.மாலை

கடலுார்-பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் கடலுார் பஸ் நிலையத்தில் போதிய அரசு டவுன் பஸ்கள் இயக்காததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 19 மாதங்களுக்கு பின் நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் காலை பள்ளிக்கு வந்தனர்.மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்ப பஸ் நிலையம் சென்றனர். அங்கு போதிய பஸ்கள் இல்லாமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.இயக்கப்பட்ட ஒரு சில அரசு டவுன் பஸ்களில் முண்டியடித்து ஏறி, படியில் தொங்கி ஆபத்தான முறையில் பயணித்தனர். சில மாணவர்கள் பஸ்சிற்காக வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் இனியாவது போதிய பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X