கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் இடம்பெற கோரி வழக்கு

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை : மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் இடம் பெற கோரிய வழக்கு விசாரணையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்தது.துாத்துக்குடி மாவட்டம்,கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:அரசியல் சாசனத்தின்எட்டாவது அட்டவணையில் உள்ள இதர 20 மொழிகளை, தாய்மொழியாக கொண்ட 85 கோடி பேருக்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாததால், மத்திய அரசின் சேவைகளை பெறும் உரிமை
தமிழ், மத்திய அரசு அலுவலகங்கள், வழக்கு

மதுரை : மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் இடம் பெற கோரிய வழக்கு விசாரணையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்தது.

துாத்துக்குடி மாவட்டம்,கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:அரசியல் சாசனத்தின்எட்டாவது அட்டவணையில் உள்ள இதர 20 மொழிகளை, தாய்மொழியாக கொண்ட 85 கோடி பேருக்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாததால், மத்திய அரசின் சேவைகளை பெறும் உரிமை மறுக்கப்படுகிறது. இது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அட்டவணையில் உள்ள இதர 20 மொழிகளையும், மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்.


latest tamil news


முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி, ஆங்கிலத்துடன் தமிழ் இடம் பெற வேண்டும். மத்திய அரசின் துறை சார்ந்த தகவல், சேவைகளை தமிழில் அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.

நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkeeran - Hosur,இந்தியா
16-நவ-202111:47:16 IST Report Abuse
Nakkeeran இது ஒரு விதண்டாவாதமான வழக்கு காரணம் தமிழ் நாட்டில் உள்ள மத்ய அரசு அலுவலகங்களில் தமிழ் கட்டாயம் என்றால், மற்ற மாநிலங்களில் இதே போனறு உரிமை கோரினால் நிலைமையை சற்று யோச்சித்து பாருங்கள் மும்பாய் மத்திய அரசு அலுவலகத்தில் பணி புரியும் ஒரு தமிழர் மராத்தியில் பேசுவாரா அல்லது தமிழில் பேசுவாரா, உடனே ஆங்கிலம் என்று சிலர் சப்பை கட்டை கட்டுவார்கள். ஆனால் வழக்கு தொடுத்தவர் கூறியிருப்பது 85 கோடி பேருக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாது என்று. இதுவும் மறை முகமாக மூன்றாவது மொழியை தினிப்பதாகும் செயல்தான்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16-நவ-202110:50:28 IST Report Abuse
J.V. Iyer திராவிட கண்மணிகள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி இருந்தால் போதாது. தமிழ் நாட்டில் முச்சந்திகளில் ஹிந்தி வேண்டும். நாடகமா ஆடுகிறார்கள்?
Rate this:
Cancel
Natarajan Sampath - Seoul,தென் கொரியா
16-நவ-202110:18:19 IST Report Abuse
Natarajan Sampath இது ஒரு நல்ல வரவேற்க தகுந்த முயற்சி. தமிழ் நாட்டில் தமிழ் கல்வி கட்டாயம் ஒவொருவரும் படிக்க வேண்டும். எல்லா அலுவலக ஏட்டிலும் தமிழ் மொழி கட்டாயம் இருக்க தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இதேபோல் எல்லா மாநிலங்களிலும் அவர்களுடைய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வளர்க்க ஒன்றிய அரசு ஆவானை செய்யவேண்டும். இதுவே மக்களுடைய ஒற்றுமைக்கு முக்கிய காரணமாக அமையும். வாழ்க தமிழ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X