காய்கறி, பழப்பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி, பழப்பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

Added : நவ 16, 2021
Share
உத்தமபாளையம் : காய்கறி, பழப்பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என உத்தமபாளையம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாண்டியன்ரானா தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: இயற்கை இடர்பாடுகளின் போது பயிர் காக்க காப்பீடு செய்யப்படுகிறது. வாழைக்கு ஏக்கருக்கு ரூ. 65,000 காப்பீட்டு தொகைக்கு பிரிமீயம் ரூ. 3250. முட்டைக்கோஸ்க்கு காப்பீடு ரூ. 23,400, பிரீமியம் ரூ.1170.

உத்தமபாளையம் : காய்கறி, பழப்பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என உத்தமபாளையம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாண்டியன்ரானா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: இயற்கை இடர்பாடுகளின் போது பயிர் காக்க காப்பீடு செய்யப்படுகிறது. வாழைக்கு ஏக்கருக்கு ரூ. 65,000 காப்பீட்டு தொகைக்கு பிரிமீயம் ரூ. 3250. முட்டைக்கோஸ்க்கு காப்பீடு ரூ. 23,400, பிரீமியம் ரூ.1170. தக்காளிக்கு காப்பீடு ரூ.16,800, பிரிமீயம் ரூ.840. கொத்தமல்லிக்கு காப்பீடு ரூ.12,300 பிரீமியம் ரூ.635.காப்பீட்டு தொகையில்பிரீமியமாக 5 சதவீதம் செலுத்தினால் போதும். இவ் வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள், உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X