கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர் சரோஜா முன் ஜாமின் மனு 'வாபஸ்'

Added : நவ 16, 2021
Share
Advertisement
நாமக்கல் : மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் ஆகியோர், தங்களது முன் ஜாமின் மனுவை 'வாபஸ்' பெற்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் குணசீலன்,65; அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினர். இவர், சரோஜா மற்றும் அவரது கணவர் லோக ரஞ்சன் மீது, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் மோசடி செய்ததாக குற்றப் புலனாய்வு பிரிவு போலீசில் புகார்

நாமக்கல் : மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் ஆகியோர், தங்களது முன் ஜாமின் மனுவை 'வாபஸ்' பெற்றனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் குணசீலன்,65; அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினர். இவர், சரோஜா மற்றும் அவரது கணவர் லோக ரஞ்சன் மீது, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் மோசடி செய்ததாக குற்றப் புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். விசாரணையில், 15 பேரிடம் 76.50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தது தெரிந்தது.

இதையடுத்து, சரோஜா, லோகரஞ்சன் மீது, மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன் ஜாமின் கோரி, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், சரோஜாவும், அவரது கணவரும் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனு, நீதிபதி குணசேகரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, சரோஜா வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜாமின் மனு மீதான விசாரணை ரத்து செய்யப்பட்டது.சரோஜா தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X