பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்புசுவர் இல்லா கண்மாய்கரை; வீடுகளுக்கு இல்லை குடிநீர் லைன்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துர் : தடுப்புச்சுவர் இல்லா கண்மாய்க்கரை ரோட்டில் ஆபத்து பயணம், புதர் மண்டி கிடக்கும் கண்மாய், வீடுகளுக்கு இல்லை குடிநீர் இணைப்பு,குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளின்றி சுகாதாரக்கேடு என பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சி மக்கள்.இந்த ஊராட்சியில் அத்திகுளம், குப்பாள்மடம்,

ஸ்ரீவில்லிபுத்துர் : தடுப்புச்சுவர் இல்லா கண்மாய்க்கரை ரோட்டில் ஆபத்து பயணம், புதர் மண்டி கிடக்கும் கண்மாய், வீடுகளுக்கு இல்லை குடிநீர் இணைப்பு,குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளின்றி சுகாதாரக்கேடு என பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்

ஸ்ரீவில்லிபுத்துார் அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சி மக்கள்.இந்த ஊராட்சியில் அத்திகுளம், குப்பாள்மடம், குருசாமிபுரம், மடவார்வளாகம், கிருஷ்ணா நகர், பசும்பொன் நகர் என பல்வேறு பகுதிகள் உள்ள நிலையில், இங்குள்ள வீடுகளுக்கு தனி குடிநீர் இணைப்பு இல்லாமல் பொது குழாய்கள் மூலமே குடிநீர் சப்ளை நடந்து வருகிறது. இது போதுமானதாக இல்லாததால் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை தொடர்கிறது.கிருஷ்ணன் கோவில் தெருவில் இருந்து அத்திகுளம் செல்லும் ரோடு குறுகலாக, கண்மாய்க்கரை ரோடு அகலமின்றி தடுப்புச்சுவர் இல்லாமலும் இருப்பதால் விபத்து அச்சத்தில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.பசும்பொன் நகரில் புதிய குடியிருப்புகள் பகுதிகளில் ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. மழைக்காலத்தில் தெருக்கள் சகதியாக பொதுமக்கள் பாதிக்கின்றனர்.சோளங்குளம் கண்மாயய் புதர் மண்டிக் கிடக்கிறது. இங்கிருந்து தெய்வேந்திரி கண்மாய் செல்லும் நீர்வரத்து ஓடையில் கழிவுகள் சேர்ந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

மடவார்வளாகம் புதிய குடியிருப்பு பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாது மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.ஆபத்து பயணம் விஜயகுமார், விவசாயி: அதிக வாகனங்கள் செல்லும் அத்திகுளம் கண்மாயில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயத்தில் மக்கள் பயணிக்கின்றனர். இரவு நேரங்களில் விபத்துக்கு ஆளாகின்றனர். கூடுதல் துாய்மை பணியாளர்களை நியமித்து தினமும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். விளாம்பட்டி வழியாக சிவகாசிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.குடிநீர் இணைப்புக்கு ஏற்பாடுசெல்வக்கனி, ஊராட்சி துணைத் தலைவர்: மின்விளக்குகள், ரோடு, சாக்கடை குறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை உடனடியாக ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் சரி செய்து வருகிறோம்.

வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை வைத்துள்ளோம்.- கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்- செண்பக மூர்த்தி, ஊராட்சி தலைவர்: பேவர் பிளாக் ரோடுகள், சமுதாய சுகாதார வளாகங்கள், மின்விளக்குகள், மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் சப்ளை போன்ற அடிப்படை தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.ஒன்றிய தலைவரிடம் முறையீடுமுத்துலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்: அத்திகுளம் தெய்வேந்திரி, காமராஜர் நகர், அருந்ததியர் தெரு, குருசாமிபுரம் பகுதிகளில் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்கபட்டுள்ளன.

பாலத்தில் தடுப்பு சுவர் கட்ட ஒன்றியக்குழு தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.நடவடிக்கை எடுக்கப்படும் மல்லி ஆறுமுகம், ஒன்றியக்குழுத் தலைவர், ஸ்ரீவி.,: கண்மாய் கரையை அகலப்படுத்தி தடுப்பு சுவர் கட்ட நெடுஞ்சாலைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய குடியிருப்பு பகுதிகளில் ரோடு, சாக்கடை, மின்விளக்கு அமைக்கப்படுகிறது. அரசின் நிதி ஒதுக்கீட்டின் போது படிப்படியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X