சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சின்னசேலம் பள்ளி மாணவர் இறப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
விழுப்புரம்-சின்னசேலம் பள்ளி மாணவர் இறந்த வழக்கில், சென்னை தலைமையிடத்து டி.ஐ.ஜி., கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தைச் சேர்ந்தவர் பாவாடை மகன் சுரேஷ், 10; அப்பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.இவர், சேலம் மாவட்டம், ஆத்துாரில் உள்ள விவசாய நிலத்தில் 1999ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

விழுப்புரம்-சின்னசேலம் பள்ளி மாணவர் இறந்த வழக்கில், சென்னை தலைமையிடத்து டி.ஐ.ஜி., கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தைச் சேர்ந்தவர் பாவாடை மகன் சுரேஷ், 10; அப்பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.இவர், சேலம் மாவட்டம், ஆத்துாரில் உள்ள விவசாய நிலத்தில் 1999ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.சுரேஷ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2016ம் ஆண்டு சுரேஷ் இறப்பு தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.அப்போதையை சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., ராதிகா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.அதில், மாணவர் சுரேஷ், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் விழுந்து இறந்தது தெரியவந்தது.இதை மறைக்க, சுரேஷ் உடலை பள்ளி நிர்வாகத்தினர் ஆத்துார் விவசாய நிலத்தில் வீசியது அம்பலமானது.இது குறித்து பள்ளி முதல்வர் பிரகாஷி, ஊழியர்கள் சின்னப்பன், மணிபாலன் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், சின்னப்பன் மற்றும் மணிபாலன் ஆகியோர் இறந்து விட்டனர்.இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அதிகாரியான, தற்போதைய சென்னை தலைமையிடத்து டி.ஐ.ஜி.,யாக உள்ள ராதிகா, கோர்ட்டில் ஆஜரானார்.அவர், நீதிபதி கோபிநாதன் முன்னிலையில், 2 மணி நேரத்திற்கும் மேலாக சாட்சியம் அளித்தார்.இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X