வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர்கள் கைது

Added : நவ 16, 2021
Share
புவனகிரி-வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய இருவரை சோழத்தரம் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சோழத்தரம் அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதி, பொட்டல் குளம் வி.ஐ.பி., நகரைச் சேர்ந்தவர் கோபால் சாமி. வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி பரணி. இவர் கடந்த மாதம் 27ம் தேதி வீட்டை பூட்டி விட்டு அதேப் பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.மறுநாள் காலை பரணியின் வீட்டின்

புவனகிரி-வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய இருவரை சோழத்தரம் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சோழத்தரம் அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதி, பொட்டல் குளம் வி.ஐ.பி., நகரைச் சேர்ந்தவர் கோபால் சாமி. வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி பரணி. இவர் கடந்த மாதம் 27ம் தேதி வீட்டை பூட்டி விட்டு அதேப் பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.மறுநாள் காலை பரணியின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து அவர் சென்று பார்த்த போது 2 சவரன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளிப்பொருட்கள் காணவில்லை. புகாரின் பேரில் சோழத்தரம் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.நேற்று மாலை பாளையங்கோட்டை ரவுண்டானா பகுதியில் ரோந்து பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜை கண்டு ஓடிய இருவரை பிடித்து விசாரித்தார். இதில், பாளையங்கோட்டை வேப்பங்குளத்தெரு வைத்திலிங்கம் மகன்கள் செந்தில்குமார்,21; ஆனந்தராஜ்,18; பரணி வீட்டில் நகைகள் திருடியதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்து ரூ.41 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X