பொது செய்தி

தமிழ்நாடு

சுத்திகரிப்பு திட்டம் தாமதம்... குடிநீரில் சேரும் கழிவுநீர்; கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியின் வேதனை

Added : நவ 16, 2021
Share
Advertisement
கூடலுார் : கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் கழிவு நீர் கலந்த குடிநீரை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இங்குள்ள பல தெருக்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ரோடாக இருப்பதால் மக்கள் சிரமம் அடைந்துஉள்ளனர்.கம்பம் ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு 1800 குடியிருப்புகள், 5950 பேர் வசிக்கின்றனர்.
 சுத்திகரிப்பு திட்டம் தாமதம்... குடிநீரில் சேரும் கழிவுநீர்;   கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியின் வேதனை


கூடலுார் : கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் கழிவு நீர் கலந்த குடிநீரை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இங்குள்ள பல தெருக்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக மண்ரோடாக இருப்பதால் மக்கள் சிரமம் அடைந்துஉள்ளனர்.

கம்பம் ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு 1800 குடியிருப்புகள், 5950 பேர் வசிக்கின்றனர். இந்திரா காலனி, தாட்கோ காலனி, ஊராட்சி அலுவலக தெரு, நாட்டாமை தெரு, 24 மனை தெலுங்கு செட்டியார் தெரு, கள்ளர் பள்ளித்தெரு, அரசமரத்தெரு, நடுத்தெரு, பேச்சியம்மன்கோயில் தெரு, சர்ச் தெரு, மாரியம்மன் கோயில் தெருக்கள் உள்ளன.

இங்குள்ள நடுத்தெரு, பஸ் ஸ்டாப் தெற்கு தெருவில் 15 ஆண்டுகளாக ரோடு அமைக்க வில்லை. குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர். பஸ் ஸ்டாப் ரோடு, கே.ஜி.பட்டி ரோடு என பல முக்கியத் தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதனால் சாக்கடை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முக்கிய சந்திப்பு, பள்ளி அருகே சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் வகையில் குப்பை கொட்டப்பட்டுள்ளது.

உடனே அகற்றி கொட்ட இடமின்றி மயான வளாகத்தை பயன்படுத்துகின்றனர். குப்பையில் தீ வைப்பதால் அதன் புகையால் மக்கள் பாதிக்கின்றனர்.ஆற்றில் கழிவு நீர் கலப்புமுல்லைப் பெரியாற்றில் இருந்து நேரடியாக பம்பிங் செய்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கூடலுார் நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆற்றில் பம்பிங் செய்யும் இடத்தில் கலப்பதால் குடிநீர் மாசுபடுகிறது. பெரியாற்றின் கரையோரத்தில் நகராட்சி சார்பில் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாசுகலந்த குடிநீரை மக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

தரமில்லாத சாக்கடை பணிபி.சிங்கம், விவசாயி, கருநாக்கமுத்தன்பட்டி: அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் 2 கி.மீ., துார ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ளது. நடுத்தெருவிலும் பல ஆண்டுகளாக மண் ரோடாகவே உள்ளது. அதனை ஒட்டியுள்ள குறுக்குத் தெருவில் தார்ரோடு சேதமடைந்து கற்கள் வெளியில் தெரியும் வகையில் உள்ளது. முக்கியத் தெருக்களில் கழிவு நீரோடை தரமில்லாமல் கட்டுகின்றனர். இந்திரா காலனியில் பல தெருக்களில் கழிவுநீரோடை மற்றும் தார்ரோடு அமைக்காமல் உள்ளது.குடிநீர் பெறும் இடத்தில் கழிவுநீர்பி.போதுமணி, குடும்பத் தலைவி, கருநாக்கமுத்தன்பட்டி: குளோரினேசன் செய்யாத குடிநீரால் ஏராளமானோர் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளனர்.

பம்பிங் செய்யும் இடத்தில் கழிவு நீர் அதிகமாக கலக்கிறது. தெருக்களில் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றவில்லை. மயானத்தில் பாலிதீன் பைகளுடன் கூடிய குப்பையை தீ வைத்து விடுவதால் அதில் இருந்து வெளியேறும் புகை மூலம் பலருக்கு தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. காளியம்மன் கோயில் தெரு, யூனியன் பள்ளி, கீழப்பட்டி பஸ் ஸ்டாப், சமுதாயக்கூடம், கள்ளர் பள்ளி அருகில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் வகையில் குப்பை கொட்டப்படுகிறது.ரூ.50 லட்சம் ஒதுக்கீடுமொக்கப்பன், தலைவர், கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி: குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் 2 புதிய தண்ணீர் தொட்டி,குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது.

ரூ.50 லட்சத்தில் பிள்ளையார் கோயில் தெருவில் இருந்து மாரியம்மன்கோயில் தெரு வரை தார் ரோடு, இந்திரா காலனியில் பேவர் பிளாக் ரோடு அமைத்து இரு பகுதியிலும் கழிவு நீரோடை, மயானத்தில் தடுப்புச்சுவர் கட்டி கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க கூடலுார் நகராட்சி ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துடெண்டர் விடப்பட்டுள்ளது. கட்டுவதற்கான இடப்பிரச்னையால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுஉள்ளது',என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X