உணவு அருங்காட்சியகம் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உணவு அருங்காட்சியகம் திறப்பு

Added : நவ 16, 2021 | கருத்துகள் (1)
Share
தஞ்சாவூர் : இந்திய உணவுக் கழகம் சார்பில், 1.1 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட உணவு அருங்காட்சியகத்தை, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.தஞ்சாவூரில் 1695ல் துவங்கப்பட்ட முதல் இந்திய உணவு கழகம், பின் நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, தஞ்சாவூரில் நிர்மலா நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில், 1,860 சதுர அடி பரப்பளவில், பெங்களூரில்
 உணவு அருங்காட்சியகம் திறப்பு

தஞ்சாவூர் : இந்திய உணவுக் கழகம் சார்பில், 1.1 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட உணவு அருங்காட்சியகத்தை, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.

தஞ்சாவூரில் 1695ல் துவங்கப்பட்ட முதல் இந்திய உணவு கழகம், பின் நாடு முழுதும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, தஞ்சாவூரில் நிர்மலா நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில், 1,860 சதுர அடி பரப்பளவில், பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் உதவியோடு, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்தார்.எம்.பி., கோபம்கலெக்டர் உள்ளிட்ட யாருக்கும் அழைப்பு இல்லாமல், இந்திய உணவு கழக அதிகாரிகள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் போது, தஞ்சாவூர் தி.மு.க., - எம்.பி., பழனிமாணிக்கம் அங்கு வந்தார். தனக்கு அழைப்பு விடுக்காதது பற்றி கேட்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின், கோபமாக கிளம்பிய எம்.பி.,யுடன் வாசல் வரை சென்ற அதிகாரிகள், அவரை சமதானப்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X