சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை வழக்கில் தலைமறைவு;

Added : நவ 16, 2021
Share
Advertisement
செஞ்சி-மனநலம் பாதிக்கப்பட்டவரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சே.பேட்டை காலனியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் வீரமுத்து, 27; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது உறவினர் சுந்தரம், 60; இரண்டு குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த செப்டம்பர் 11ம் தேதி அதிகாலை சுந்தரம்

செஞ்சி-மனநலம் பாதிக்கப்பட்டவரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சே.பேட்டை காலனியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் வீரமுத்து, 27; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது உறவினர் சுந்தரம், 60; இரண்டு குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த செப்டம்பர் 11ம் தேதி அதிகாலை சுந்தரம் குடும்பத்தினர் வீட்டில் இல்லாத போது வீரமுத்து, சுந்தரத்தின் வீட்டை அடித்து உடைத்து, பொருட்களுக்கு தீ வைத்தார். இதில், ஆத்திரமடைந்த சுந்தரம் குடும்பத்தினர் வீரமுத்துவை அடித்துக் கொலை செய்தனர்.இது குறித்து நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் சுந்தரத்தின் மகன்கள் விஜயகுமார், 35; ராஜேந்திரன், 28; மனைவி ரத்தினம், 55; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விஜயகுமார், ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். ரத்தினம் தலைமறைவானார்.இந்த வழக்கு விசாரணையில் சுந்தரத்தின் உறவினர்கள் மணிகண்டன் மகன் ரவி, 50; ஏழுமலை, 60; ஆகியோருக்கும் கொலையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ரத்தினம், ரவி, ஏழுமலை ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X