இந்தியா

விமோசனம்:குண்டும் குழியுமான சாலைகளுக்கு...பொதுப்பணி துறை அதிரடி முடிவு

Added : நவ 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் சாலைகளின் தரத்தை உறுதிப்படுத்த, இனி அமைக்கப்படும் சாலைகளின் தடிமனை அதிகரிக்க பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது. அதனால், குண்டும் குழியுமானசாலைகளுக்கு விரைவில் விமோசனம் பிறக்க உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் 64 கி.மீ., துாரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. 36 கி,மீ., பிரதான மாநில சாலைகள், 324 கி.மீ., மாவட்ட சாலைகள், 318 கி.மீ., கிராம சாலைகள் என
 விமோசனம்:குண்டும் குழியுமான சாலைகளுக்கு...பொதுப்பணி துறை அதிரடி முடிவு

புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் சாலைகளின் தரத்தை உறுதிப்படுத்த, இனி அமைக்கப்படும் சாலைகளின் தடிமனை அதிகரிக்க பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது.

அதனால், குண்டும் குழியுமானசாலைகளுக்கு விரைவில் விமோசனம் பிறக்க உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் 64 கி.மீ., துாரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. 36 கி,மீ., பிரதான மாநில சாலைகள், 324 கி.மீ., மாவட்ட சாலைகள், 318 கி.மீ., கிராம சாலைகள் என மொத்தம், 741 கி.மீ., சாலைகள் மாநில பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.இதுதவிர, 1,052 கி.மீ., சாலைகளை நகராட்சியும், 1,342 கி.மீ., கொம்யூன் பஞ்சாயத்து சாலைகளை, உள்ளாட்சி நிர்வாகமும் பராமரித்து வருகின்றன.புதிய சாலை மீது மூன்று ஆண்டுகளுக்கு பின்பு, அவுட் லேயர் சாலை அமைக்க வேண்டும்.

அதிக போக்குவரத்து உள்ள சாலைகளை அடிக்கடி பராமரிக்க வேண்டும். இப்பணிகளுக்காக, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தும், பலனில்லை.மாநிலம் முழுதும் சாலைகள் பஞ்சராகி, படுமோசமான நிலையில் உள்ளன. நகரில் பிரதான சாலைகள் மட்டுமின்றி, கிராமப்புற சாலைகளின் நிலைமையும் படுமோசமாக உள்ளது.சாலைகள் குண்டும் குழியுமாக மாறி விடுவதற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், சாலைகளை தரம் இல்லாமல் போடுவதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.மாநிலத்தில் இனி போடப்படும் சாலைகள் தரமாக இருக்க வேண்டும் என்பதில், முதல்வர் ரங்கசாமி உறுதியாக உள்ளார்.இதற்கான உத்தரவினையும் பொதுப்பணித் துறைக்கு பிறப்பித்துள்ளார். முதல்வரின் உத்தரவுக்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியில், பொதுப்பணித் துறை இறங்கியுள்ளது.

அதன்படி, மாநிலத்தில் சாலையின் தரத்தை உறுத்திப்படுத்த, ஒப்பந்ததாரர்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு போட ரெடியாகி வருகிறது.தற்போது மாநிலத்தில் சாலைகள் அனைத்தும் 20 மி.மீ., தடிமனில் போடப்படுகிறது. இதன் மீது ரோடு ரோலர் மூலம் அழுத்தம் கொடுக்கும்போது தடிமன் குறுகிப் போய் விடுகிறது.இப்படி போடப்படும் சாலைகளில், தொடர்ந்து வாகன போக்குவரத்து மற்றும் மழை போன்றவற்றால் தாக்குப் பிடிக்க முடியாமல், அடுத்த சில நாட்களிலேயே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி விடுகின்றன.அதனால், சாலையின் தரத்தை உறுதிப்படுத்த, 50 மி.மீ., தடிமனில் சாலைகள் அமைக்க மாநில பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது.அத்துடன், ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்ததாரர்களே இனி அச்சாலையை பொறுப்புணர்வுடன் பராமரிக்க அனுமதி தரப்பட உள்ளது.

சாலையின் தரத்தில் அரசுக்கு திருப்தி இருந்தால், உடனடியாக ஒப்பந்ததாரர்களுக்கு பணம் செட்டில் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.நகர பகுதியில் தற்போது ரூ.13 கோடி செலவில் ஹட்கோ உதவியுடன், 44 சாலைகளை செப்பனிட பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது. இந்த சாலைப் பணிகளின்போது, மேற்கண்ட புதிய விதிமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.எனவே சாலையின் தரம் குறித்த விஷயத்தில் ஒப்பந்ததாரர்கள், இனி சாக்குபோக்கு சொல்லி தப்பிக்க முடியாது.மத்திய அரசு உதவியுடன் போடப்படும் சாலைகளில்,

தற்போது ஒவ்வொரு அடுக்கிலும் தார் கலவைகளுடன் சில ரசாயனம் கலந்து போடப்படுகிறது.இது போன்று புதுச்சேரியில் இனி சாலை அமைக்கும் போது, ரசாயன கலவைகளை கலந்து போட, பொதுப்பணி துறை திட்டமிட்டுள்ளது.அது தொடர்பாக விபரங்களை சேகரித்து வருவதால், குண்டும் குழியுமான சாலைகளுக்கு விரைவில் விமோசனம் கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X