சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி மாதிரி 'பிஹேவ்' பண்ணாதீங்க! கலெக்டர் காட்டம்

Added : நவ 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கரூர் : பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மருத்துவ கல்லுாரி ஆர்.எம்.ஓ.,விடம், 'ரவுடி மாதிரி பிஹேவ் பண்ணாதீங்க' என்ற கலெக்டரின் காட்டமான பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, வெங்கமேட்டைச் சேர்ந்த பரிதா பேகம் என்பவர், 'என் 6 வயது மகனுக்கு, இதயம் இடம் மாறி வலது புறம்
 ரவுடி மாதிரி 'பிஹேவ்' பண்ணாதீங்க! கலெக்டர் காட்டம்

கரூர் : பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், மருத்துவ கல்லுாரி ஆர்.எம்.ஓ.,விடம், 'ரவுடி மாதிரி பிஹேவ் பண்ணாதீங்க' என்ற கலெக்டரின் காட்டமான பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, வெங்கமேட்டைச் சேர்ந்த பரிதா பேகம் என்பவர், 'என் 6 வயது மகனுக்கு, இதயம் இடம் மாறி வலது புறம் உள்ளது. 'இதற்கு சிகிச்சை செய்ய பொருளாதார வசதி இல்லாததால், அரசு உதவி செய்ய வேண்டும்' என, மனு அளித்தார்.

கூட்டத்திற்கு வந்த கரூர் மருத்துவக் கல்லுாரி ஆர்.எம்.ஓ., குமாரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை பெற்ற அவர், பரிதா பேகத்துக்கு சரியான பதில் தரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து, கலெக்டர் பிரபுசங்கரிடம், பரிதா பேகம் முறையிட்டார். உடனடியாக ஆர்.எம்.ஓ., குமாரை அழைத்து விசாரித்தார். கலெக்டரிடமும் அவர் அலட்சியமாக பதிலளித்தார்.

டென்ஷன் ஆன கலெக்டர் பிரபு சங்கர், ''அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு, முறையாக பதிலளிக்க வேண்டும். என்னிடமே இப்படி பேசும் போது, நோயாளிகளிடம் எப்படி பேசுவீங்க என தெரியுது.''ஏற்கனவே, இது சம்பந்தமா உங்கள் டீன்கிட்ட பேசி இருக்கிறேன். ரவுடி மாதிரி பிஹேவ் பண்ணாதீங்க. முறையான பதில் சொல்ல முடியலைன்னா கூட்டத்திற்கு வராதீங்க,'' என, காட்டமாக பேசினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-நவ-202119:26:53 IST Report Abuse
Bhaskaran அரசு அதிகாரிகள் ஆணை …… பிறந்தவர்கள்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
21-நவ-202104:47:21 IST Report Abuse
meenakshisundaram இந்த மாதிரி இருதயம் இடம் மாறி பிறந்தவர் மிக மிக அரிது .இதற்கு மருத்துவ உலகம் இதுவரை தீர்வு எதுவும் கண்டதாக தெரிய வில்லை .பொதுவாக இந்த மாதிரி மனிதர்கள் நார்மலாகவே இருக்கும் வரை வாழ்கிறார்கள் .
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
18-நவ-202111:59:24 IST Report Abuse
Nakkeeran 2016 தேர்தல் பரப்புரையில் போது தற்போதைய முதல்வர் கூறியது """" கரூர் மாவட்டத்தில் ஒருவரின் கட்டப்பஞ்சாயத்து ராஜ்ஜியம் போல அராஜகம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது .திமுக ஆட்ச்சிக்கு வந்தால் அவர்கள் ஒடுக்கப்படுவார்கள் """
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X