பொது செய்தி

இந்தியா

ஜவகர் நவோதயா பள்ளி சேர்க்கை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி, வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:எதிர்வரும் 2022-23ம் கல்வி ஆண்டில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில், தெரிவு

புதுச்சேரி-ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி, வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:எதிர்வரும் 2022-23ம் கல்வி ஆண்டில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில், தெரிவு நிலைத்தேர்வு மூலம் 9ம் வகுப்பில் காலியிடங்கள் நிரப்பப் பட உள்ளது.இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி, வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் www.navodaya.gov.in அல்லது nvsadmissionclassnine.in என்ற இணைய தளத்தில் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X