பொது செய்தி

தமிழ்நாடு

வைகை ஆறு வழியாக நீர் வரத்து முழு வீச்சில் விவசாய பணிகள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக செல்லும் நீரால் கரையோர கிராமங்களில் விவசாய பணிகள் முழுவீச்சில் துவங்கி உள்ளது.வைகை அணை நீர் மட்டம் நவ.,10ல் 69.29 அடியாக (அணை உயரம் 71 அடி.)உயர்ந்தது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் ஆற்றின் வழியாக திறக்கபட்டுள்ளது.நீர் முதலக்கம்பட்டி, சீரங்காபுரம், வேகவதி ஆசிரமம், டி.அணைக்ரைப்பட்டி, மூணாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி,
 வைகை ஆறு வழியாக நீர் வரத்து முழு வீச்சில்  விவசாய பணிகள்

ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக செல்லும் நீரால் கரையோர கிராமங்களில் விவசாய பணிகள் முழுவீச்சில் துவங்கி உள்ளது.

வைகை அணை நீர் மட்டம் நவ.,10ல் 69.29 அடியாக (அணை உயரம் 71 அடி.)உயர்ந்தது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் ஆற்றின் வழியாக திறக்கபட்டுள்ளது.நீர் முதலக்கம்பட்டி, சீரங்காபுரம், வேகவதி ஆசிரமம், டி.அணைக்ரைப்பட்டி, மூணாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, பி.புதுார், புள்ளிமான்கோம்பை என பல கிராமங்களை கடந்து செல்கிறது.

இந்நீரால் கரையோர விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. விவசாய பணிகள் முழுவீச்சில் துவங்கி காய்கறிகள், நெல், வாழை நடவுக்கு தயாராகி வருகின்றனர். வைகை அணை நீர் மட்டம் முழு அளவில் இருப்பதால் சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிக்கு ஆற்றின் வழியாக திறக்கப்படும்போது அதிக நாட்கள் நீர் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X