பொது செய்தி

இந்தியா

'பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்'

Added : நவ 16, 2021
Share
Advertisement
பாகூர்-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் குருவிநத்தம் பள்ளியில், பழங்குடியினர் தியாகம் போற்றும் தின விழா நேற்று நடந்தது.துறை இயக்குனர் யஷ்வந்தையா வரவேற்றார்.செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசுகையில், 'இருளஞ்சந்தை கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நீர்நிலையில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதனால், அவர்களுக்கு எந்த பயனுமில்லை. அவர்களுக்கு

பாகூர்-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் குருவிநத்தம் பள்ளியில், பழங்குடியினர் தியாகம் போற்றும் தின விழா நேற்று நடந்தது.துறை இயக்குனர் யஷ்வந்தையா வரவேற்றார்.செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசுகையில், 'இருளஞ்சந்தை கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நீர்நிலையில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதனால், அவர்களுக்கு எந்த பயனுமில்லை. அவர்களுக்கு உடனடியாக மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும். விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும்'' என்றார்.பாட்கோ மேலாண் இயக்குனர் தயாளன், சுகாதாரத் துறை துணை இயக்குனர் உமாசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணை இயக்குனர் விஜயா நன்றி கூறினார்.பழங்குடியினர் வெளிநடப்புநிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி, காரைக்கால் பூர்வீக பழங்குடியினர் இருளர் நலச்சங்க தலைவர் செல்வராஜ், மற்றும் உறுப்பினர்கள் விழாவை புறக்கணித்து, வெளியேறத் துவங்கினர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தும் பலனில்லை.பின்னர், செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார்.அவர்கள், 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ள விழாவிற்கு, எஸ்.டி., அல்லாத பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவர்களுக்கு (பி.டி.,) ஏன் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுபோன்ற செயல்களால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை இழந்து வருகிறோம்' என கூறி, விழாவை புறக்கணித்து விட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X