பொது செய்தி

இந்தியா

நகரப்பகுதியில் பைக் திருட்டு அதிகரிப்பு போலீசாருக்கு எஸ்.பி., அதிரடி உத்தரவு

Added : நவ 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி-நகரப் பகுதியில் சமீப காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்துள்ளதால், பைக் திருடும் கும்பலை உடனடியாக கண்டுபிடிக்க எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி நகரப்பகுதியில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒதியஞ்சாலை, பெரியக்கடை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல மோட்டார் சைக்கிள்கள் திருடு

புதுச்சேரி-நகரப் பகுதியில் சமீப காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்துள்ளதால், பைக் திருடும் கும்பலை உடனடியாக கண்டுபிடிக்க எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி நகரப்பகுதியில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒதியஞ்சாலை, பெரியக்கடை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது.உருளையன்பேட்டை பெரியார் நகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் நான்கு மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. கிழக்கு சரகத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, கிழக்கு எஸ்.பி. தீபிகா, நேற்று பெரியக்கடை, ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை, முத்தியால்பேட்டை போலீஸ் நிலைய அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்து, மோட்டார் சைக்கிள்களை மீட்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் திருட்டு ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X