பொது செய்தி

இந்தியா

ஊசுடு, பாகூர் ஏரிகள் நிரம்பின வழக்கத்தைவிட கூடுதல் மழை

Added : நவ 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி;புதுச்சேரியில் இந்தாண்டு வழக்கத்தை விட அதிகமான மழை பெய்துள்ளது. கடந்த 20 நாட்களில் 632 மி.மீ., மழை பெய்துள்ளது.மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி துவங்கியது.அதிலிருந்து புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 26ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 632 மி.மீ., மழை பெய்துள்ளது.

புதுச்சேரி;புதுச்சேரியில் இந்தாண்டு வழக்கத்தை விட அதிகமான மழை பெய்துள்ளது. கடந்த 20 நாட்களில் 632 மி.மீ., மழை பெய்துள்ளது.மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி துவங்கியது.அதிலிருந்து புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 26ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 632 மி.மீ., மழை பெய்துள்ளது. புதுச்சேரியின் வருடாந்திர சராசரி மழை அளவு 1,380 மி.மீ., ஆனால், இதுவரை 1,863 மி.மீ., ஆக மழை பெய்துள்ளது.புதுச்சேரியில் உள்ள முக்கிய ஏரிகள் கிட்டத்தட்ட முழு கொள்ளவிற்கு நிரம்பியுள்ளன. பாகூர் ஏரி 3.20 மீட்டர், ஊசுட்டேரி 3.5 மீட்டர் என, முழு கொள்ளவை எட்டியுள்ளன. ஊசுட்டேரியில் இருந்து உபரி நீர் கடந்த 11ம் தேதி முதல் வெளியேற்றப் படுகிறது.தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு விட்டது. மழை தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை மக்கள் தெரிவிக்க 1070/1077 என்ற அவசர கால எண்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.மத்திய அந்தமான் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்று, வரும் 18ம் தேதி தென் ஆந்திர மாநிலம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமா புதுச்சேரியில் தீவிரமான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.அதனால் மாவட்ட நிர்வாகம் அவசர கால நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அவசர கால குழுக்கள் மற்றும் அரசு துறைகள் முழு வீச்சில் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர கால தேவைக்கு, காவல் துறையை 1031, 112, வருவாய் பேரிடர் துறையை 1070, 1077, மின்சார மறுசீரமைப்பு புகார்களுக்கு 1912, தீயணைப்பு துறையை 101 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X