சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி எழுதிய கடிதம்: தடயவியல் ஆய்வுக்கு செல்கிறது

Added : நவ 16, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோவை : கோவையில், பாலியல் துன்புறுத்தல் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள உண்மை தன்மையை அறிய, தடயவியல் சோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.கோவை, கோட்டைமேட்டைச் சேர்ந்த, 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். பாலியல் தொல்லைபள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 31, மாணவிக்கு
மாணவி எழுதிய கடிதம்: தடயவியல் ஆய்வுக்கு செல்கிறது

கோவை : கோவையில், பாலியல் துன்புறுத்தல் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள உண்மை தன்மையை அறிய, தடயவியல் சோதனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கோவை, கோட்டைமேட்டைச் சேர்ந்த, 17 வயது மாணவி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். பாலியல் தொல்லைபள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, 31, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், அப்பள்ளியில் இருந்து விலகி, சில மாதங்களுக்கு முன் வேறு பள்ளியில் சேர்ந்தார். மூன்று நாட்களுக்கு முன் மாணவி, அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக, அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' பிரிவில் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்தனர். பள்ளி முதல்வரான கேரளா, கொச்சியைச் சேர்ந்த மீரா ஜாக்சன், 46 என்பவரிடம் மாணவி புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சூழலில், மாணவி எழுதியதாக கூறப்படும் சிறிய பேப்பர் ஒன்று இருந்தது. அதில், மிதுன் சக்ரவர்த்தி உட்பட மூவர் குறித்த குறிப்புகள் உள்ளன. அதனுடன், மாணவி கைப்பட எழுதிய ஒருகடிதமும் உள்ளது. போலீசார் அதை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'கடிதத்தில் உள்ளது மாணவியின் கையெழுத்து தானா என்பதை உறுதி செய்ய, தடயவியல் சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்து உள்ளோம். 'மேலும் பேப்பர் குறிப்பில் உள்ள நபர்கள் யார், எதற்காக இந்த பெயர்கள் எழுதப்பட்டுள்ளன; இவர்களுக்கும் மாணவியின் தற்கொலைக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றனர்.

பொதுவாக 'போக்சோ' வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர், புகைப்படம் போன்ற தகவல்களை வெளியிடக்கூடாது.


வழக்கு போட முடிவு


ஆனால், கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினர், மாணவியின் புகைப்படம், பெயர் போன்ற தகவல்களை வெளியிட்டனர்.அதேபோன்று 'ஆன்லைன்' உட்பட சில மீடியாக்களும் மாணவியின் பெயர், புகைப்படத்தை வெளியிட்டன. இதனால், இவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு பதிவு செய்ய, கோவை மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
16-நவ-202112:13:35 IST Report Abuse
raja ஆகா.. கிரிப்டோ கிருத்துவர்களை காப்பாற்ற விடியல் அரசு மற்றும் காவல்நண்பர்கள் நடவடிக்கை எடுக்க ஆரமித்துவிட்டார்கள்...
Rate this:
knmcknmc - thiruchi,இந்தியா
17-நவ-202115:28:02 IST Report Abuse
knmcknmcவிடியல் அரசா...?? மோடி அரசா??...
Rate this:
vijay - coimbatore,இந்தியா
18-நவ-202110:42:11 IST Report Abuse
vijay//..விடியல் அரசா...?? மோடி அரசா??.....// விடியல் அரசுதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X