மாணவியிடம் பாலியல் சீண்டல் வாலிபர் சிறையில் அடைப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
வில்லியனுார்-வில்லியனுார் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர், 'போக்சோ' பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்.வில்லியனுார் அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (22). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக இருந்த 13 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியடித்து வீட்டில்

வில்லியனுார்-வில்லியனுார் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர், 'போக்சோ' பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்.வில்லியனுார் அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (22). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக இருந்த 13 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியடித்து வீட்டில் இருந்து தப்பிச் சென்று, அருகே இருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அதன்பேரில் அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பூவரசன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.வேலைக்கு சென்று வீடு திரும்பிய பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை மாணவி கூறினார். இது குறித்து மாணவியின் பெற் றோர் வில்லியனுார் போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிந்து, தலைமறைவான பூவரசனை தேடி வந்தனர். நேற்று கூடப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்திருந்த பூவரசனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X