தேவசம்போர்டு தலைவர் பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேவசம்போர்டு தலைவர் பொறுப்பேற்பு

Added : நவ 16, 2021
Share
சபரிமலை : சபரிமலையை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக வழக்கறிஞர் அனந்த கோபன், உறுப்பினராக மனோஜ் நேற்று பொறுப்பேற்றனர். தேவசம் போர்டு செயலாளர் காயத்ரிதேவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் ஆர். அனில், முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார், உறுப்பினர் தங்கப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சபரிமலை உள்ளிட்ட தென் கேரளாவின் கோயில்களை நிர்வகிக்கும்
 தேவசம்போர்டு தலைவர் பொறுப்பேற்பு

சபரிமலை : சபரிமலையை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக வழக்கறிஞர் அனந்த கோபன், உறுப்பினராக மனோஜ் நேற்று பொறுப்பேற்றனர். தேவசம் போர்டு செயலாளர் காயத்ரிதேவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் ஆர். அனில், முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார், உறுப்பினர் தங்கப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சபரிமலை உள்ளிட்ட தென் கேரளாவின் கோயில்களை நிர்வகிக்கும் இந்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு. கருணாகரன் முதல்வராக இருந்த போது தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்பட்டது.பொறுப்பாளர்கள் பதவி காலம் நான்கு ஆண்டுகளாக இருந்தது. ஆனால் கம்யூனிஸ்ட் அரசு பொறுப்பேற்கும் போதெல்லாம் போர்டில் அரசின் தலையீடு இருக்கும். அதே போன்று தற்போது பதவிக்காலம் இரண்டாண்டாக குறைக்கப்பட்டது.

ஒரு போர்டு பொறுப்பேற்று நடைமுறைகளை அறிந்து தயாராகும் போது அடுத்த ஆண்டில் வெளியேற வேண்டும். பழையது போல நான்கு ஆண்டு பதவி காலத்துடன் போர்டை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X