சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு வன்கொடுமை; வாலிபருக்கு சாகும் வரை சிறை

Added : நவ 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுக்கோட்டை : விராலிமலையில், 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், பிச்சாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன், 27; கூலி தொழிலாளி. கடந்த ஜூன் 30ல், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ஒரு வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்துஉள்ளார். சிறுமியின் பெற்றோர்
 சிறுமிக்கு வன்கொடுமை; வாலிபருக்கு சாகும் வரை சிறை

புதுக்கோட்டை : விராலிமலையில், 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், பிச்சாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன், 27; கூலி தொழிலாளி. கடந்த ஜூன் 30ல், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ஒரு வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்துஉள்ளார். சிறுமியின் பெற்றோர் புகார்படி, கீரனுார் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் மாதவனை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.நீதிபதி சத்யா நேற்று அளித்த தீர்ப்பில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த மாதவனுக்கு, இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனையும், சிறுமியை தாக்கியதற்காக, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
17-நவ-202101:25:36 IST Report Abuse
John Miller ? ஏழைக்கு ஒரு நீதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X