பொது செய்தி

இந்தியா

கல் வீடு திட்டத்திற்கு ரூ.126.74 கோடி தேவை

Added : நவ 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி-''மத்திய நிதி உதவியை ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்'' என மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி பேசினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம், நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், புதுச்சேரி மாநில நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று

புதுச்சேரி-''மத்திய நிதி உதவியை ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்'' என மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி பேசினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம், நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், புதுச்சேரி மாநில நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. எனவே புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த மத்திய அரசு நிதி உதவி அளித்திட வேண்டும். ஹெலிகாப்டர் சேவை, நீர் விளையாட்டு, மாநாட்டு மையம், திரைப்பட நகரம், பொழுதுபோக்கு பூங்கா அமைத்திட மத்தியஅரசு நிதி உதவி அளித்திட வேண்டும்.தடையில்லா மின்சாரம் வழங்கிட மின்துறையில் அடிப்படை கட்டமைப்பு வசதியினை மேம்படுத்திட அவசியம் ஆகிறது. இதற்காக மத்திய அரசின் திட்டமான ஆர்.டி.எஸ்.எஸ்., மூலம் நிதி அளிக்க வேண்டும்.புதுச்சேரியில் தொழில்துறையை மேம்படுத்த, புதிய தொழிற்சாலைகள் அமைப்பது அவசியம். புதிய தொழிற்சாலைகள் அமைக்க போதுமான இடங்கள் புதுச்சேரி, காரைக்காலில் தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசு தொழிற்சாலைகள் துவங்க சலுகைகள் வழங்க வேண்டும்.தகவல் தொடர்பு மற்றும் அது சார்ந்த தொழில்கள் துவங்கவும், 'ஸ்டார்ட் அப்' கம்பெனி அமைக்கவும் நிதி உதவி அளித்திட வேண்டும். சூரிய மின்சக்தி சார்ந்த திட்டங்களை ரெஸ்கோ, பூட் மூலம் செயல்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் புதுச்சேரியில் அமைப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது.அனைவருக்கும் சுகாதார திட்டம், 500 படுக்கைகள் கொண்ட தொற்றுநோய் சம்பந்தமான மருத்துவமனை அமைக்கவும், பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, மத்திய அரசு 100 சதவீதம் உதவி அளிக்க வேண்டும். சாகர்மாலா திட்டத்தில் புதுச்சேரி துறைமுகத்தை மேம்படுத்த கண்டெய்னர் சரக்கு முனையம் அமைக்கவும், படகு போக்குவரத்து துவக்கவும், துறைமுகத்தை துார் வாரவும், சாலையை இணைக்கவும் நிதியுதவி வழங்க வேண்டும்.அனைவருக்கும் கல் வீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை எனது அரசு உயர்த்தி உள்ளது. இதற்காக 126.74 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இத்தொகையை மத்திய அரசு அளித்திட வேண்டும்.அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, நகர போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்க வேண்டும். மத்திய அரசு வழங்கும் நிதி உதவியை ஆண்டுதோறும் 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X