பொது செய்தி

இந்தியா

அமித்ஷாவுடன் நமச்சிவாயம் சந்திப்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி-''மக்கள் நல திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்'' என அமைச்சர் நமச்சிவாயத்திடம், மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவலியுறுத்தினார்.ஆந்திர மாநிலம், திருப்பதியில் நடந்த, தென் மண்டல வளர்ச்சி கவுன்சிலின் 29வது கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, திருப்பதியில் தங்கினார்.நேற்று காலை திருப்பதி சென்ற புதுச்சேரி உள்துறை அமைச்சர்

புதுச்சேரி-''மக்கள் நல திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்'' என அமைச்சர் நமச்சிவாயத்திடம், மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவலியுறுத்தினார்.ஆந்திர மாநிலம், திருப்பதியில் நடந்த, தென் மண்டல வளர்ச்சி கவுன்சிலின் 29வது கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, திருப்பதியில் தங்கினார்.நேற்று காலை திருப்பதி சென்ற புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக ஏற்கனவே டில்லியில் சந்தித்து அளித்த மனு குறித்து நினைவுபடுத்தினார்.புதுச்சேரி போலீஸ் துறையை நவீனமாக்கவும், போலீசாருக்கு பதவி உயர்வு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். சேதராப்பட்டில் ஏற்கனவே கைகப்படுத்தப்பட்ட 750 ஏக்கரில், பொருளாதார மண்டலம் அமைக்க வேண்டும். லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து மீண்டும் திறக்க ரூ. 200 கோடி மத்திய அரசு நிதி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்து கேட்டறிந்த அமித்ஷா, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.புதுச்சேரியில் தற்போது செயல்படுத்தப்படும் மக்கள்நல திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். புதுச்சேரியை நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும். பா.ஜ., கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.பின்னர், அமைச்சர் அமித்ஷாவுடன், நமச்சிவாயம், திருப்பதி கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த 108 சங்காபிஷேகத்தில் பங்கேற்று, மதியம் புதுச்சேரி திரும்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X