அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., சிலை: சைதை துரைசாமி திறப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
தேவக்கோட்டை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே எம்.ஜி.ஆர்., சிலையை, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திறந்து வைத்தார்.கிராம நிர்வாக அலுவலர் பதவியை உருவாக்கிய, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நன்றி செலுத்தும் வகையில், கிராம நிர்வாக அலுவலர்கள் சமூக கல்வி அறக்கட்டளை. தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சேர்ந்து, 9.5 அடி
 எம்.ஜி.ஆர்., சிலை: சைதை துரைசாமி திறப்பு

தேவக்கோட்டை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே எம்.ஜி.ஆர்., சிலையை, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி திறந்து வைத்தார்.

கிராம நிர்வாக அலுவலர் பதவியை உருவாக்கிய, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நன்றி செலுத்தும் வகையில், கிராம நிர்வாக அலுவலர்கள் சமூக கல்வி அறக்கட்டளை. தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சேர்ந்து, 9.5 அடி உயரத்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை அமைக்க முடிவு செய்தனர்.


வெண்கல சிலை


சிவகங்கை மாவட்டம், மேலசெம்பொன்மாரி கிராமத்தில், காரைக்குடி - தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலையில், எம்.ஜி.ஆர்., முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. சிலை திறப்பு விழாவுக்கு சங்க நிறுவனர் போஸ் தலைமை வகித்தார்.எம்.ஜி.ஆர்., சிலையை, மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி திறந்து வைத்து, மாலை அணிவித்து பேசியதாவது:நான், 14 வயதில் அரசியலுக்கு வந்தவன். எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டேன். சைதை சட்டசபை தேர்தலில் தோல்வியுற்றபோது எம்.ஜி.ஆர்., 'சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் நீ தான்' எனக் கூறினார்.

பல ஆண்டு காலம் கோர்ட் நடவடிக்கைகளால் தேர்தல் நடைபெறவில்லை. அவர் கூறியபடி, 30 ஆண்டுகள் கழித்து, அந்த கனவு பலித்தது. மாநகராட்சி மேயர்அவர் மறைந்தாலும், அவர் கூறியபடி நான் சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்தேன்.'சென்னை மாநகராட்சியில் கட்சி நிதி வசூலித்தால் கெட்ட பெயர் ஏற்படும்' என, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் நேரில் கூறினேன்.

அதற்கு ஜெயலலிதா, 'உங்களை பற்றி என்னிடம் எம்.ஜி.ஆர்., நிறைய சொல்லியுள்ளார்' எனக் கூறினார். அந்த அளவுக்கு இருவரது நம்பிக்கையை பெற்றவன். இரட்டை இலையில் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் பார்க்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X