சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது அருந்தி மூவர் பலியான வழக்கு; விஷம் கலந்து கொன்ற நண்பர் கைது

Added : நவ 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை : கோவையில், மது அருந்தி மூன்று பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, விஷம் கலந்து கொடுத்த பெயின்டரை போலீசார் கைது செய்தனர்.கோவை, பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பெயின்டர்கள் சக்திவேல், 60; பார்த்திபன், 31; சமையல் தொழிலாளி முருகானந்தம், 55. மூவரும் நவ., 3ம் தேதி இரவு மது அருந்தி மறுநாள் காலை, அடுத்தடுத்து உயிரிழந்தனர்.பிரேத பரிசோதனையில், மதுவில் விஷம்
 மது அருந்தி மூவர் பலியான வழக்கு; விஷம் கலந்து கொன்ற நண்பர் கைது

கோவை : கோவையில், மது அருந்தி மூன்று பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, விஷம் கலந்து கொடுத்த பெயின்டரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பெயின்டர்கள் சக்திவேல், 60; பார்த்திபன், 31; சமையல் தொழிலாளி முருகானந்தம், 55. மூவரும் நவ., 3ம் தேதி இரவு மது அருந்தி மறுநாள் காலை, அடுத்தடுத்து உயிரிழந்தனர்.பிரேத பரிசோதனையில், மதுவில் விஷம் கலந்திருந்தது தெரிந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து, பெயின்டரான ராஜசேகர், 63 என்பவரை கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது: உயிரிழந்த மூன்று பேருக்கும், ராஜசேகருக்கும் இடையே தொழில் ரீதியாக பழக்கம் இருந்துள்ளது. அவரது வீட்டுக்கு இவர்கள் சென்று வருவது வழக்கம். அவ்வாறு சென்று வந்தபோது, குடும்ப பிரச்னை தொடர்பாக முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து, மூன்று பேரையும் பழிவாங்க ராஜசேகர் நினைத்தார்.

இதன்படி ராஜசேகர், வெளிநாட்டில் இருந்து மது வந்திருப்பதாகவும், இரண்டு ஆண்டுகளாக தான் மது அருந்துவதை நிறுத்தி விட்டதால், மூன்று பேரும் குடித்து கொள்ளுங்கள் என, சயனைடு கலந்த மதுவை கொடுத்துள்ளார். இதை குடித்த அவர்கள் பலியாகினர்.

அதிகளவு மது போதையில் மூவரும் உயிரிழந்து விட்டதாக போலீசார் வழக்கை முடித்து விடுவர் என ராஜசேகர் நினைத்துஉள்ளார். ஆனால், பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை நடத்தியதில், ராஜசேகர் பிடிபட்டார். இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yesappa - Bangalore,இந்தியா
17-நவ-202113:40:06 IST Report Abuse
Yesappa மூன்று குடிகாரர்கள் இறந்ததால் TASMAC வருமானம் குறைந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X