மனைவி அடித்து கொலை; நாடகமாடிய கணவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி அடித்து கொலை; நாடகமாடிய கணவர் கைது

Added : நவ 16, 2021
Share
மயிலாடுதுறை : மனைவியை அடித்து கொலை செய்து நாடகமாடிய கணவரை, போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 38; கொத்தனார். இவரது மனைவி கலா, 35 சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இரு மகன்கள் உள்ளனர். கடந்த 13ம் தேதி மாலை நடந்த தகராறில், அய்யப்பன் மனைவியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் கலா

மயிலாடுதுறை : மனைவியை அடித்து கொலை செய்து நாடகமாடிய கணவரை, போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 38; கொத்தனார். இவரது மனைவி கலா, 35 சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இரு மகன்கள் உள்ளனர். கடந்த 13ம் தேதி மாலை நடந்த தகராறில், அய்யப்பன் மனைவியை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் கலா சுருண்டு விழுந்தார்.

அதை பொருட்படுத்தாமல் அய்யப்பன் வயல்வெளிக்கு சென்று விட்டார். இரண்டு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது, கலா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

கலாவின் அண்ணன் சுப்பிரமணியன், 41 தங்கை சாவில் சந்தேகம் இருப்பதாக, கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார்.கலா உடலை கைப்பற்றி, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அய்யப்பனை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X