பள்ளி மாணவி தற்கொலை; ஆசிரியை மீது நடவடிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி தற்கொலை; ஆசிரியை மீது நடவடிக்கை

Added : நவ 16, 2021 | கருத்துகள் (6)
Share
இளையான்குடி : ''இளையான்குடி அருகே திருவள்ளூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கவிதாவை தற்கொலைக்கு துாண்டிய மேலபள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை, நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருவள்ளூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கவிதா இளையான்குடி மேலபள்ளிவாசல் பெண்கள்
 பள்ளி மாணவி தற்கொலை; ஆசிரியை மீது நடவடிக்கை

இளையான்குடி : ''இளையான்குடி அருகே திருவள்ளூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கவிதாவை தற்கொலைக்கு துாண்டிய மேலபள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை, நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருவள்ளூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கவிதா இளையான்குடி மேலபள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். வீட்டு பாடம் செய்யாததால் ஆசிரியை சம்சத்நிஷா கண்டித்தார். மனமுடைந்த கவிதா நவ., 6ல் எலிபேஸ்டை தின்று தற்கொலை செய்து கொண்டார். இறந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆறுதல் கூறினார்.

அவர் கூறுகையில், மாணவி கவிதாவின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை சம்சத்நிஷா, பள்ளி நிர்வாகத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் சினிமாவில் ஜாதிய வன்மத்தை துாண்டுகிற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை மாற்றியமைக்க வேண்டும். சூர்யா கொடுக்கின்ற விளக்கம் ஏற்றுகொள்ளும் வகையில் இல்லை. கதாநாயகன் பெயர் சந்துரு என்றும், போலீஸ் அதிகாரி பெயர் பெருமாள்சாமி என்றும் உண்மை சம்பவத்தில் உள்ளதை வைத்துள்ளனர். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் அடித்து கொலை செய்தவர் பெயர் அந்தோணிசாமி என்பதை மாற்றி குருமூர்த்தி என்று வைத்துள்ளனர். இதையெல்லாம் மாற்ற வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X