கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எச்.ராஜா மீதான பிடிவாரன்ட் ரத்து

Added : நவ 16, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மீதான பிடிவாரன்ட் உத்தரவை ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றம் ரத்து செய்தது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் 2018ல் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் அறநிலையத்துறை அலுவலர்களை அவதுாறாக பேசியதாக ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிகரன் புகாரின்படிமக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு
H Raja, BJP, court

ஸ்ரீவில்லிபுத்துார் : பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மீதான பிடிவாரன்ட் உத்தரவை ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றம் ரத்து செய்தது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் 2018ல் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் அறநிலையத்துறை அலுவலர்களை அவதுாறாக பேசியதாக ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிகரன் புகாரின்படிமக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்றத்தில் எச். ராஜா மீது வழக்கு நடந்தது.

அக்.,7ல் விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.அவர் நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் மீதான பிடிவாரன்டை ரத்து செய்து நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார். விசாரணை டிச., 8க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X