சிறுபாக்கம்--மங்களூர் ஒன்றிய புதிய சேர்மனாக சுகுணா சங்கர், துணைச் சேர்மனாக கலைச்செல்வி செல்வராஜ் பதவியேற்றனர்.நிகழ்ச்சிக்கு, தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மங்களூர் பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, தண்டபாணி முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, அமிர்தலிங்கம், செங்குட்டுவன், தொழிலதிபர் கண்ணன் ரவி, ஊராட்சி தலைவர்கள் தேவராஜ், கருணாநிதி, ராமு, திட்டக்குடி நகர செயலர் பரமகுரு, ஒன்றிய அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மங்களூர் ஒன்றிய சேர்மனாக சுகுணா சங்கர், துணைச் சேர்மனாக கலைச்செல்வி செல்வராஜ் பதவியேற்றனர்.அமைச்சர் கணேசன் பங்கேற்று பேசுகையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் மக்கள் அதிகளவில் பாதித்த நிலையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். பல கட்டுப்பாடுகளை விதித்து இந்தியளவில் பாதிப்புகளை குறைத்த முதல் மாநிலமாக மாற்றினார். தற்போது, மழையால் பாதித்த இடங்களை முதல்வர் நேரில் பார்வையிட்டு, மக்களின் குறைகளை நிவர்த்தி செய்கிறார். தி.மு.க., ஆட்சியில் நலிவுற்ற 50 ஆயிரம் தொழிலாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. முதல்வரிடம் முறையிட்டு நிதி ஒதுக்கீடு செய்து 1 ஆண்டில் மங்களூர் ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE