அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹிந்துக்களை சினிமா துறை கொச்சைப்படுத்துகிறது: எச்.ராஜா குற்றச்சாட்டு

Updated : நவ 16, 2021 | Added : நவ 16, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : ''ஹிந்துக்களை சினிமா துறை கொச்சை படுத்துகிறது,'' என பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது: சிங்கார சென்னை தற்போது மழையில் மூழ்கும் சென்னை ஆகிவிட்டது. வள்ளுவர் கோட்டம் கூட நீர்நிலையை மூடி தான் கட்டப்பட்டுள்ளது. சட்டத்திற்கும், ஆகமத்திற்கும் இந்த ஆட்சியில் மரியாதை கிடையாது. சென்னையில்
H Raja, BJP, Jai Bhim

ஸ்ரீவில்லிபுத்துார் : ''ஹிந்துக்களை சினிமா துறை கொச்சை படுத்துகிறது,'' என பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது: சிங்கார சென்னை தற்போது மழையில் மூழ்கும் சென்னை ஆகிவிட்டது. வள்ளுவர் கோட்டம் கூட நீர்நிலையை மூடி தான் கட்டப்பட்டுள்ளது. சட்டத்திற்கும், ஆகமத்திற்கும் இந்த ஆட்சியில் மரியாதை கிடையாது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு மூலம் ரூ.5000 இழப்பீடு வழங்க வேண்டும்.

கடலுார், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே தமிழகத்தில் நடக்கிறது. வேறு எதுவும் நடக்கவில்லை. அரசாங்கம் செயல்பட ஆரம்பிக்கவில்லை. மக்கள் பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.


latest tamil news



கோயில்களில் தங்கம் எடுக்கும் வேலையும் நீதிமன்ற உத்தரவால் தடுக்கப்பட்டுள்ளது. கோயில் வழிபாடுகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிடக்கூடாது. கோவை பள்ளி மாணவி சம்பவத்தில் தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும். முதல்வரின் கொளத்துார் தொகுதி தற்போது குளத்து ஊராக மாறி வீடுகள் மிதக்கின்றன. தி.மு.க., அரசு முழு அளவில் தோல்வி அடைந்து விட்டது.

ஹிந்துக்களை சினிமா துறையும் கொச்சை படுத்துகிறது. ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணு, சந்துரு பெயர்கள் அப்படியே இருக்கும்போது அந்தோணிசாமி பெயர் மட்டும் குருமூர்த்தி என மாற்றப்பட்டது ஏன். படத்தில் வைக்கப்பட்டுள்ள மகாலட்சுமி காலண்டர் மாற்றப்பட வேண்டும். நடிகர் சூர்யாவின் மனைவி ஹிந்துக்களை கோயிலுக்கு போகாதீர்கள் என இழிவாக பேசியவர், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
20-நவ-202107:03:58 IST Report Abuse
rajan ஹிந்துக்களை சினிமா துறை கொச்சை படுத்துகிறது, சினிமா துறையில் இருப்பது ஹிந்துக்கள் தானே ஹிந்துக்களை எதிர்க்கும் எச் ராசா, ஒத்த ஒட்டு கட்சி புகழ் பிஜேபி
Rate this:
Cancel
Sridhar Swaminathan - Edison, New Jersy,யூ.எஸ்.ஏ
17-நவ-202100:48:35 IST Report Abuse
Sridhar Swaminathan உண்மையான பெயர் வைப்பதை விட இந்த மாதிரி வைத்தால் , இந்துக்கள் வெறுப்பார்கள், அது துட்ட்தாக மாறும் என்பது படத்தை தயாரித்த ஜோ அண்ட் சூர்யா விற்கு தெரியும். ககுழப்பம் இருந்தால் பத்திரிக்கைள் ஊதி பெரிதாக ஆக்கும் என்பதும் தெரியும். சில ஆண்ட்டுகளுக்கு முன்னாள் கையில் பணம் இல்லாமல் இருந்த இவர்கள் எப்பிடி பல படங்களை தயாரிக்கிறார்கள் என்பதற்கு காரணம் புரியம்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
16-நவ-202116:35:41 IST Report Abuse
vbs manian துளசி மாதிரி இருந்த அந்த கால நடிகரை காலச்சக்கரம் எப்படி சுழற்றி சுழற்றி அடிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X