சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரசவ அறை மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில் இரு பெண்கள் காயம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
வேப்பூர்--வேப்பூர் அருகே பிரசவ அறையின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனர். மேலும், தாய் மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ரேவதி, 20; இவருக்கு நேற்று காலை 7:00 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால், நல்லுார் வட்டார அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காலை 9:30

வேப்பூர்--வேப்பூர் அருகே பிரசவ அறையின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனர். மேலும், தாய் மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ரேவதி, 20; இவருக்கு நேற்று காலை 7:00 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால், நல்லுார் வட்டார அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காலை 9:30 மணியளவில் ரேவதிக்கு பிரசவ அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முருகனின் சித்தி எழில்ராணி, 38, செவிலியர்கள் மகேஸ்வரி, ஸ்ரீவதனி, உதவியாளர் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.காலை 10:30 மணியளவில் ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது பிரசவ அறையின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. அதில், முருகனின் சித்தி எழில்ராணி, 38; மருத்துவ உதவியாளர் செல்வி, 54; காயமடைந்து, நல்லுார் வட்டார அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முருகன் மனைவி செல்வி, 20; குழந்தை, செவிலியர்கள் மகேஸ்வரி, ஸ்ரீவதனி ஆகியோர் காயமின்றி தப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X