பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. கடந்த 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்க அரசு உத்தரவிட்டது. கடலுார் மாவட்டத்தில் மழை பெய்ததால், 19 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள்

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. கடந்த 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்க அரசு உத்தரவிட்டது. கடலுார் மாவட்டத்தில் மழை பெய்ததால், 19 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், வடலுார், விருத்தாசலம் ஆகிய கல்வி மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என, 454 பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று 1765 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கிருமிநாசினி மூலம் கை சுத்தம் செய்த பின் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி பின்பற்றி வகுப்புகளில் 20 மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். கடலுார் புதுப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர் பாலசுப்ரமணியம் இனிப்பு மற்றும் ரோஜப்பூக்கள் கொடுத்து வரவேற்றனர். கூடுதல் கலெக்டர்கள் ரஞ்சித்சிங், பவன்குமார் கிரியப்பனவர், ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தேவனாதன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். புவனகிரிபுவனகிரி பகுதியில் சமூக அமைப்பினர் பள்ளிக்கு வந்த 1 முதல் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி, முககவசம் கொடுத்து வரவேற்றனர். ஆசிரியர்கள் கதை பாடல் மூலம் கற்பித்தனர். புவனகிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை ராமசஞ்சீவி வரவேற்றார். அரசுப்பள்ளிககளை காப்போம் அமைப்பின் நிறுவனர் வீனஸ் அன்பழகன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, கனகசபை, இலியாஸ்பாஷா ஆகியோர் கல்வி உபகரணங்கள் வழங்கினர். உதவி ஆசிரியை கீதா நன்றி கூறினார். சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி மணிமாறன் தலைமை தாங்கினார். குலோத்துங்கன், செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். சந்தைத்தோப்பு தொடக்கப் பள்ளியிலும் இனிப்புகள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X