தமிழ்நாடு

கேள்விக்குறி; பைபாஸ் சாலையில் கழிவுகள் குவிந்து சுகாதாரம்...விருத்தாசலத்தில் தொற்று நோய் பரவும் அபாயம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் பைபாஸ் சாலைகளில் கழிவுகள் குவிந்து சுகாதார சீர்கேடாக மாறியுள்ளதால், பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பெருவணிக வளாகங்கள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றும்
 கேள்விக்குறி; பைபாஸ் சாலையில் கழிவுகள் குவிந்து சுகாதாரம்...விருத்தாசலத்தில் தொற்று நோய் பரவும் அபாயம்

விருத்தாசலம்-விருத்தாசலம் பைபாஸ் சாலைகளில் கழிவுகள் குவிந்து சுகாதார சீர்கேடாக மாறியுள்ளதால், பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பெருவணிக வளாகங்கள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றும் கழிவுகள் பெரியவடவாடி, கண்டியங்குப்பம் பகுதிகளில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்குகளில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்படுகிறது.

மக்காத குப்பைகள் பிளாஸ்டிக் சாலைகள் போடும் பணிகளுக்கும், மக்கும் குப்பைகள் நுண்ணுயிர் செயலாக்கத்திடலில் உரமாக மாற்றி, விவசாயிகளுக்கு வழங்கும் பணி நடக்கிறது.இருப்பினும் இரவு நேரங்களில் மணிமுக்தாறு மற்றும் பைபாஸ் சாலைகளில் திறந்த வெளியில் கோழி, ஆடு, மீன் கழிவுகள், கட்டட கழிவுகள், மக்காத பிளாஸ்டிக் பொருட்களும் வீசப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகள், மருந்து கடைகளில் பயன்படுத்திய மருந்துகள், ஊசிகள் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது.இவற்றால் பைபாஸ் சாலையில் துர்நாற்றம் வீசுவதுடன், பன்றிகள், நாய்களுக்கு புகலிடமாக மாறியுள்ளது. நகருக்கு வெளியே இருபுறமும் உள்ள பைபாஸ் சாலைகளில் கழிவுகள் குவிந்து சுகாதார சீர்கேடாக மாறியதால் வாகன ஓட்டிகள் முகம் சுழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும், நாய், பன்றிகள் திடீரென சாலையை கடக்கும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைவதும், அதிவேகமாக வருவோர் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.பைபாஸ் சாலையோரம் கழிவுகள் கொட்டுவதை தடுப்பதுடன், குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்தடை கிடப்பில்நகர வீதிகளில் நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்து, இரவில் மக்கள் நிம்மதியாக துாங்க முடியவில்லை. வீதிகளில் விளையாடும் சிறுவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் விரட்டுவது அதிகரித்தது. புகார்களின் பேரில், சென்னையில் இருந்து சிறப்புக்குழு வரவழைத்து, நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி நடந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இப்பணி கிடப்பில் போனதால் நாய்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து விட்டது.பன்றிகள் அதிகரிப்புநாய்கள் போல பன்றிகள் எண்ணிக்கையும் அதிகரித்து குடியிருப்புகளை சுற்றி உலா வருகின்றன.

மழை காலம் துவங்கிய நிலையில், பன்றிகளால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் பன்றிகளை பிடிக்க முயற்சி செய்தால், அவற்றை வளர்ப்போர் மோதலில் ஈடுபடுகின்றனர். இதனால், கடந்த இரண்டு முறையாக பன்றிகளை பிடிக்கும் பணியின் போது சட்டம் ஒழுங்கு பாதித்தது. போலீஸ் பாதுகாப்புடன் பன்றிகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X