பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் கணேசன் வரவேற்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் பூதாமூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களை, அமைச்சர் கணேசன் பூங்கொத்து, இனிப்பு கொடுத்து வரவேற்றார்.கொரோனா தொற்று காரணமாக, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகள் துவங்கின. உளவியல் ரீதியாக மாணவர்களை தயார்படுத்துமாறு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. விருத்தாசலம் பூதாமூர் நகராட்சி நடுநிலைப்

விருத்தாசலம்-விருத்தாசலம் பூதாமூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களை, அமைச்சர் கணேசன் பூங்கொத்து, இனிப்பு கொடுத்து வரவேற்றார்.கொரோனா தொற்று காரணமாக, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகள் துவங்கின. உளவியல் ரீதியாக மாணவர்களை தயார்படுத்துமாறு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. விருத்தாசலம் பூதாமூர் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். சி.இ.ஓ., பூபதி தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., ராம்குமார், தாசில்தார் சிவக்குமார், டி.இ.ஓ., கோகிலா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை மீனாம்பிகை வரவேற்றார்.அமைச்சர் கணேசன் மாணவ, மாணவிகளுக்கு முக கவசம், இனிப்பு, பூங்கொத்து, பேனா உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார். தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, வேல்முருகன், இளைஞரணி பொன்கணேஷ், மாவட்ட பிரதிநிதி பாண்டியன், மாணவரணி அருள்குமார், நிர்வாகிகள் குமார், ராஜா, சபா, கிருஷ்ணராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியை அனுசுயா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X