பொது செய்தி

தமிழ்நாடு

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

Added : நவ 16, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்திகளின் விமானங்களுக்கு வேதமந்திரங்கள் முழங்க கோலாகலமாக பாலாலயம் நடந்தது.விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இதையொட்டி புதுப்பிக்கப்பட்ட ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர்

விருத்தாசலம்-விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்திகளின் விமானங்களுக்கு வேதமந்திரங்கள் முழங்க கோலாகலமாக பாலாலயம் நடந்தது.விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இதையொட்டி புதுப்பிக்கப்பட்ட ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் விமானங்களுக்கு, நேற்று காலை காலை 6:00 மணிக்கு மேல், 7:15 மணிக்குள் பாலாலயம் நடந்தது. பெரியநாயகர் சன்னதியில் பஞ்சமூர்த்திகளுக்கு நேற்று அதிகாலை இரண்டாம் கால பூஜை செய்யப்பட்டது.அத்திப்பலகையில் பாலாலயம் செய்யப்பட்ட விமானங்களுக்கு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிேஷக ஆராதனை செய்தனர். செயல் அலுவலர் முத்துராஜா, திருப்பணி கமிட்டி தலைவர் அகர் சந்த் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X