சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அகதிகள் இலங்கை செல்ல உதவிய 4 பேர் கைது

Added : நவ 16, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : பாம்பனில் இருந்து அகதிகள் கள்ளப்படகில் இலங்கை செல்ல உதவிய கடத்தல்காரர்கள் 4 பேரை கியூ போலீசார் கைது செய்தனர்.தமிழகத்தில் தங்கியிருந்த அகதிகள் 3 பேர், நவ.,14ல் பாம்பன் முந்தல்முனை கடற்கரையில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கை சென்றனர். இதுதொடர்பாக அந்நாட்டு போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பாம்பனில் கியூ போலீசார் விசாரித்ததில்,

ராமேஸ்வரம் : பாம்பனில் இருந்து அகதிகள் கள்ளப்படகில் இலங்கை செல்ல உதவிய கடத்தல்காரர்கள் 4 பேரை கியூ போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் தங்கியிருந்த அகதிகள் 3 பேர், நவ.,14ல் பாம்பன் முந்தல்முனை கடற்கரையில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கை சென்றனர். இதுதொடர்பாக அந்நாட்டு போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பாம்பனில் கியூ போலீசார் விசாரித்ததில், அக்காள்மடத்தைச் சாமுவேல்ராஜன் மகன் எபிராஜ் 51, அலெக்சாண்டர் மகன் தேசிங்குராஜன் 46, செங்கோல்ராஜ் மகன் சீமோன் பெரோசியஸ் 29, மரியராஜன் மகன் ஏசா 29, ஆகியோர் அகதிகளை படகில் ஏற்றி சென்றதும், இதற்காக ரூ. 80 ஆயிரம் பெற்றதும் தெரியவந்தது. இவர்களை கியூ போலீசார் கைது செய்து, நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X