பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் உயிருக்கு ஆபத்தான நோயாளி காவேரி மருத்துவமனை சிகிச்சையில் மறுவாழ்வு

Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை-கொரோனா தொற்றால், 100 சதவீத பாதிப்புகளுடன் வந்த, 35 வயது நபருக்கு, காவேரி மருத்து வமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.இதுகுறித்து, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது:ஆந்திரா மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்த, 35 வயது நபர், கடுமையான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது நுரையீரலில், 100 சதவீதம் தொற்று பாதிப்பு இருந்தது.உயிருக்கு

சென்னை-கொரோனா தொற்றால், 100 சதவீத பாதிப்புகளுடன் வந்த, 35 வயது நபருக்கு, காவேரி மருத்து வமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.இதுகுறித்து, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது:ஆந்திரா மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்த, 35 வயது நபர், கடுமையான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது நுரையீரலில், 100 சதவீதம் தொற்று பாதிப்பு இருந்தது.உயிருக்கு ஆபத்தான நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.சிகிச்சையின் முதல் வாரத்தில், சுவாசிப்பதற்காக கழுத்தின் முன்புறத்தில் ஒரு கீறலிடப்பட்டு, மூச்சுக்குழாயோடு ஒரு டியூப் இணைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.படுக்கையில், எந்தவொரு பக்கமும் தானாக திரும்பக்கூட முடியாத நிலையில், மிக பலவீனமாக இருந்தார். வென்டிலேட்டர் சாதனத்தின் வழியாக சுவாசிப்பதில் இருந்து படிப்படியாக அகற்றப்பட்டதற்கு பின், தினசரி இயன்முறை சிகிச்சை தரப்பட்டது. அவரது செயல்பாடு முன்னேற்றம் காணும் வரை, வென்டிலேட்டருடன் இணைக்கப்பட்ட நிலையிலேயே, சில அடிகள் நடக்குமாறு அவருக்கு பயிற்சி தரப்பட்டது.உயிர் பிழைப்பதற்கான சாத்திக் கூறு மிக குறைவாக இருந்த நிலையிலும், மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் மருத்துவ சிகிச்சையில் வாயிலாக குணமடைந்து வீடு திரும்பினார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X