அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்கள் குழு இன்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை : டெல்டா மாவட்டங்களில், பயிர் சேதங்களை பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, இன்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.கன மழை காரணமாக, டெல்டாவில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, பயிர் சேத விபரங்களை அறிய, அமைச்சர்கள் குழுவை 11ம் தேதி முதல்வர் ஸ்டாலின் நியமித்தார்.கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையிலான குழுவில்,

சென்னை : டெல்டா மாவட்டங்களில், பயிர் சேதங்களை பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, இன்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

கன மழை காரணமாக, டெல்டாவில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, பயிர் சேத விபரங்களை அறிய, அமைச்சர்கள் குழுவை 11ம் தேதி முதல்வர் ஸ்டாலின் நியமித்தார்.கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், சக்கரபாணி, மகேஷ், மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றனர்.

இக்குழுவினர் பயிர் சேதங்களை பார்வையிட்டனர். விவசாயிகளை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தனர். முதல்வர் சென்ற போது, அவரை சந்தித்து சேத விபரங்களை தெரிவித்தனர். முழுமையான அறிக்கையை அமைச்சர்கள் குழு, இன்று முதல்வரிடம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமைச்சர்கள் குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில், மத்திய அரசிடம் நிவாரணம் கேட்பதோடு, விவசாயிகளுக்கு மாநில அரசு தரப்பில் இழப்பீடு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X