பொது செய்தி

தமிழ்நாடு

மழை வெள்ளத்தில் தப்பிக்க 'ஜாக்கி' உதவியுடன் உயர்ந்த வீடு

Added : நவ 16, 2021
Share
Advertisement
திருவொற்றியூர்-மழை பாதிப்பில் இருந்து தப்புவதற்காக, பள்ளத்தில் இருந்த வீடு, 'ஜாக்கி' உதவியுடன், ௫ அடி உயர்த்தப்பட்டது.திருவொற்றியூர், கலைஞர் நகர், ஒன்பது தெருவைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் - பிரீத்தி தம்பதி. இவர்கள், 3௫ ஆண்டு பழமையான வீட்டில் வசிக்கின்றனர். அவ்வப்போது போடப்பட்ட சாலையால், வீடு பள்ளமாகி போனது. இதனால், சாதாரண மழைக்கே மழை நீர் வீட்டிற்குள் புகும் நிலை

திருவொற்றியூர்-மழை பாதிப்பில் இருந்து தப்புவதற்காக, பள்ளத்தில் இருந்த வீடு, 'ஜாக்கி' உதவியுடன், ௫ அடி உயர்த்தப்பட்டது.திருவொற்றியூர், கலைஞர் நகர், ஒன்பது தெருவைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் - பிரீத்தி தம்பதி. இவர்கள், 3௫ ஆண்டு பழமையான வீட்டில் வசிக்கின்றனர். அவ்வப்போது போடப்பட்ட சாலையால், வீடு பள்ளமாகி போனது. இதனால், சாதாரண மழைக்கே மழை நீர் வீட்டிற்குள் புகும் நிலை ஏற்பட்டது. எனவே, வீட்டை மாற்றாமலும், இடித்து கட்டாமலும், ௫ அடி உயர்த்த, தம்பதி திட்டமிட்டனர்.அதன்படி, நவீன தொழில்நுட்பமான, ஜாக்கி உதவியுடன் வீட்டை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.சென்னை கோயம்பேடில், பாட்னா கட்டடக்கலை நிபுணர்களுடன் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன், தரைத்தளத்தில் இருந்து, 45 ஜாக்கிகள் உதவியுடன், 40 ஊழியர்கள் கட்டடத்தின் தரைதளத்தை உயர்த்தி, அடியில் கான்கிரீட் போட்டு, வீட்டில் எந்த விரிசலும் இல்லாமல், கட்டி முடித்தனர்.இது குறித்து வீட்டு உரிமையாளர் கூறுகையில், 'வீட்டை பழமை மாறாமல் உயரமாக மாற்றித்தருவதற்கு, 40 லட்சம் ரூபாய் செலவாகும் என்றனர். ஆனால், பாட்னா புதிய தொழில்நுட்பத்துடன், ௭ லட்சம் ரூபாய் செலவில் வீட்டை உயர்த்திக் கொடுத்துள்ளனர்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X