பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கட்டணமாக ரூ.74 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை : இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணமாக, 74 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.அரசு பள்ளி மாணவர்களை உயர் கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்தியது.100 சதவீதம்இன்ஜினியரிங், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில், இந்த ஆண்டு முதல் இட ஒதுக்கீடு
 இன்ஜி., படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கட்டணமாக ரூ.74 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை : இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணமாக, 74 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களை உயர் கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்தியது.100 சதவீதம்இன்ஜினியரிங், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில், இந்த ஆண்டு முதல் இட ஒதுக்கீடு அமலாகியுள்ளது.'இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு, அனைத்து விதமான கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும்' என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, இந்த ஆண்டு இன்ஜினியரிங் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான கட்டணங்களை, அரசின் சார்பில் கல்லுாரிகளுக்கு வழங்குவதற்கான அரசாணையை, உயர் கல்வி துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் நேற்று பிறப்பித்தார்.அதன் விபரம்:தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி கருத்துருவை பரிசீலித்து, படிப்பு கட்டணமாக 45.61 கோடி ரூபாய்; விடுதி கட்டணமாக 25.32 கோடி; போக்குவரத்து கட்டணமாக 3.35 கோடி ரூபாய் என, மொத்தம் 74.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு கட்டணம் வழங்கப்படுகிறது. அதை பின்பற்றி, இன்ஜினியரிங் மாணவர்களுக்கான கட்டணமும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் இருந்து, மருத்துவ சேவை பணிகள் கழகம் வழியாக, கல்லுாரிகளுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு கல்வி ஆண்டில் துவக்கத்திலும், 100 சதவீத படிப்பு கட்டணம் விடுவிக்கப்படும். விடுதி கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணத்தில், காலாண்டுக்கான கட்டணம் மட்டும் முன்னதாக விடுவிக்கப்படும்.

அண்ணா பல்கலை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலை மற்றும் மத்திய அரசு கல்லுாரிகளுக்கு நேரடியாக கட்டணம் வழங்கப்படும். அரசு நிதியுதவி கல்லுாரிகளின் சுயநிதி பாடப் பிரிவுகள், சுயநிதி கல்லுாரிகள் ஆகியவற்றுக்கு, கல்வி கட்டண நிர்ணய குழு உத்தரவின்படி, கல்வி கட்டணம் மற்றும் வேலைவாய்ப்புக்கான பயிற்சி கட்டணம் வழங்கப்படும்.விடுதி கட்டணமாக அதிகபட்சம், 40 ஆயிரம் ரூபாய் வரை மட்டும் வழங்கப்படும். போக்குவரத்து கட்டணமாக அதிகபட்சம், 25 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வசூலுக்கு தடை!


உயர் கல்வித்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்து உள்ள உத்தரவு:அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இன்ஜினியரிங் சேர்ந்துள்ள மாணவர்களிடம், கல்லுாரிகள் எந்த கட்டணத்தையும் வசூலிக்க கூடாது. திருப்பி வழங்கக்கூடிய காப்புத்தொகை, நுாலக கட்டணம், உணவு விடுதி காப்பு தொகை கட்டணம் போன்றவற்றையும், கல்லுாரிகள் தரப்பில் மாணவர்களிடம் வசூலிக்க கூடாது. ஒவ்வொரு கல்லுாரியிலும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் குறை தீர்க்க, தனிப் பிரிவு துவங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X