அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மழை நீருடன் கழிவு நீர் கலப்பு

Added : நவ 16, 2021
Share
Advertisement
அய்யப்பன்தாங்கல்-அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில், ஆறு நாட்களுக்கு மேலாக தேங்கி உள்ள மழை நீருடன், கழிவு நீர் கலந்துள்ளதால் பகுதிமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.சென்னைக்கு மிக அருகில், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி உள்ளது. மொத்தம், 15 வார்டுகள் உடைய அந்த ஊராட்சியில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை வசதி இல்லாததால், ஒவ்வொரு

அய்யப்பன்தாங்கல்-அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில், ஆறு நாட்களுக்கு மேலாக தேங்கி உள்ள மழை நீருடன், கழிவு நீர் கலந்துள்ளதால் பகுதிமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.சென்னைக்கு மிக அருகில், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி உள்ளது. மொத்தம், 15 வார்டுகள் உடைய அந்த ஊராட்சியில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை வசதி இல்லாததால், ஒவ்வொரு ஆண்டு மழைக்கும், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி முழுதும் பாதிக்கப்படும் நிலை தொடர்கிறது.இதில், 2015 நவ., மற்றும்- டிச., மாதங்களில் பெய்த மழையில், ஊராட்சியின் அனைத்து பகுதிகளிலும், 4 அடி உயரத்திற்கு மழை நீர் சூழ்ந்தது.சென்னையில் சமீபத்தில் பெய்த மழையில், அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் வழக்கம் போல மழை நீர் தேங்கியது. வழக்கத்திற்கு மாறாக, மழை நின்று பல நாட்களாகியும் இன்னும் மழை நீர் வடியவில்லை.இதில், மருதம் நகரில் 3 மற்றும் 4வது தெருக்கள், தனலட்சுமி நகர், ஈ.வி.பி., பிரபு அவென்யூ, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில், ஆறு நாட்களுக்கு மேலாக மழை நீர் தேங்கிஉள்ளது.இத்துடன் கழிவு நீர் கலந்துள்ளதால், பகுதிமக்கள் தண்ணீரில் நடக்க முடியாத நிலை நீடிக்கிறது. மேலும், பாம்பு, தேள் போன்ற ஊர்வன குடியிருப்புகளில் புகுவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, தமிழக சட்டசபை ஆய்வுக்குழு, தமிழக அரசின் தலைமை செயலர், தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு மனுக்களை அனுப்பியும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.எங்கள் ஊராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.கால்வாய்கள் மாயம்அய்யப்பன்தாங்கல் ஊராட்சி, போரூர் ஏரியின் மிக அருகில் உள்ளது. மழைக்காலங்களில், மாங்காடு, பூந்தமல்லி, காட்டுப் பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர், கால்வாய்கள் வாயிலாக, போரூர் ஏரிக்குச் செல்லும்.அந்த கால்வாய்கள் அனைத்தும், அய்யப்பன்தாங்கல் வழியாக சென்றன. மழை நீர் கால்வாய்கள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில், வீடாகவோ, சாலையாகவோ மாறிவிட்டன.அய்யப்பன்தாங்கலில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து, வெள்ள நிவாரண சிறப்பு குழு அதிகாரி, அமுதா ஐ.ஏ.எஸ்., தலைமையிலான பொதுப்பணி துறையினர், 2015ல் ஆய்வு செய்தனர். அதில், தந்தி கால்வாயில் இருந்து பிரியும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள், அடையாளப்படுத்தப்பட்டன.ஆனால், இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப் படவில்லை. மேலும், போரூர் ஏரி உபரி நீர் போக்கு கால்வாய் பணிகளை, ஆறு ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X