பொது செய்தி

தமிழ்நாடு

ஆறுகளில் நிரந்தர நீர் தர கண்காணிப்பு நிலையங்கள்

Added : நவ 16, 2021
Share
Advertisement
சென்னை : முக்கிய ஆறுகளில் நிரந்தர நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழகத்தில் காடுகள் மற்றும் மரங்களின் அடர்த்தியை, மாநிலத்தின் நிலப்பரப்பில், 33 சதவீதமாக உயர்த்த, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு அமைத்துள்ளது. இது, லாப நோக்கமற்ற நிறுவனமாக செயல்படும். இதன் தலைவராக, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் செயல்படுவார். நிதி,

சென்னை : முக்கிய ஆறுகளில் நிரந்தர நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் காடுகள் மற்றும் மரங்களின் அடர்த்தியை, மாநிலத்தின் நிலப்பரப்பில், 33 சதவீதமாக உயர்த்த, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு அமைத்துள்ளது. இது, லாப நோக்கமற்ற நிறுவனமாக செயல்படும். இதன் தலைவராக, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் செயல்படுவார்.

நிதி, எரிசக்தி, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, பொதுப்பணித் துறை செயலர்கள், தலைமை வனப் பாதுகாவலர் ஆகியோர், நிர்வாக குழுவில் இடம்பெறுவர். முதலீட்டு தொகையாக, 5 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல, பட்ஜெட்டில் அறிவித்தபடி, தமிழகத்தில் முக்கிய ஆறுகளின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில், நிரந்தர நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தவும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X